Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா.. 13ல் யாகசாலையுடன் தொடக்கம்.. 18ல் சூரசம்ஹாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. நவம்பர் 18ஆம் தேதி கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களிலும், சிவ ஆலயங்களிலும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.

சூரனை வதம் செய்த சுப்ரமணியர் அருள்பாலிக்கும் திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஆறு நாட்கள் நடைபெறும். இந்த ஆறு நாட்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபடுவார்கள்.

Kanda sashti festival begins with yaga salai on 13th November in Tamil Nadu Murugan temples

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் நவம்பர் 13 தொடங்கி 18ஆம் தேதி வரை முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது.

நவம்பர் 13ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, பின்னர் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும். பக்தர்கள் காப்புக்கட்டிக்கொண்டு சஷ்டி மண்டபத்தில் விரதத்தினை தொடங்குவார்கள்.

முதல் 5ஆம் திருநாள் வரை கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். நவம்பர் 18ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். விரதம் இருந்த பக்தர்கள் தங்களின் விரதத்தினை முடித்துக்கொண்டு கடலில் நீராடிவிட்டு சாப்பிடுவார்கள்.

நவம்பர் 19 ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகளும், பின்னர் 5 மணியளவில் அம்பாள் தபசுக்காட்சிக்கு புறப்படுதலும் நடைபெறும். மாலை 6.30க்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றுதல், இரவில் திருக்கல்யாணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, வரும் 13ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரசாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கோவிலில் இருந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைதொடர்ந்து சன்னதி நடை அடைக்கப்படும். மாலை 6 மணிக்கு வடக்குகிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும்,தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறும்.

இதனைதொடர்ந்து 19ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் தனுர்லக்கினத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரிஷப லக்கினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் 45ம் ஆண்டு கந்தசஷ்டி விழா நவம்பர்13ல் துவங்குகிறது. நவம்பர் 18ல் சூரசம்ஹாரம் நடைபெறும். இக்கோயிலில் குன்றக்குடி தேவஸ்தானம் மற்றும் திருமுருகன் திருப்பேரவையினர் கடந்த 44 ஆண்டுகளாக கந்த சஷ்டி விழா நடத்தி வருகின்றனர்.

ஏழு நாட்கள் நடைபெறும் இந்த விழா இந்தாண்டு வரும் 13ஆம் தேதி துவங்குகிறது. தினசரியும் மாலை 5: 50 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இரவு 7: 00 மணிக்கு தீபாராதனையும் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் நின்றகோலத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிப்பார். 18ஆம் தேதி காலை 10: 30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். 18ஆம் தேதி மாலை 4: 30 மணிக்கு உற்சவர் முருகன் புறப்பாடாகி, தேரோடும் வீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும். நவம்பர்19ல் காலை 10: 00 மணிக்கு மேல் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+