Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கந்த சஷ்டி.. சூரசம்ஹாரம் காண குவியும் கூட்டம்.. திருச்செந்தூர் எங்கும் எதிரொலிக்கும் அரோகரா முழக்கம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் கடற்கரையில் நடைபெற உள்ளது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எங்கும் அரோகரா முழக்கம் எதிரொலிக்கிறது.

செந்தில் நாதன்: திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் நடத்தும் ஆலயத்தில் எங்கும் அரோகரா முழக்கம் எதிரொலிக்கிறது. தினசரியும் சுப்ரமணியரை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றாலும் கந்த சஷ்டியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி அங்கேயே தங்கியிருந்து கடும் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை முதலே கடற்கரையில் எங்கும் பக்தர்கள் கூட்டத்தை காண முடிகிறது.

 Kandha Sashti: Devotees throng Thiruchendur Subramanya Swamy Temple on November 18 for Soorasamharam

6 நாட்கள் கடும் விரதம்: ஐப்பசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் திருச்செந்தூரின் தேவ சேனாதிபதி முருகனுக்கும் சூரனுக்கும் இடையே நிகழ்ந்த போரில் சூரனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்றார் முருகன். இதனை போற்றும் விதமாக ஆண்டு தோறும் 6 நாட்கள் மக்கள் சஷ்டி விரதம் அனுசரித்து கந்த சஷ்டி விழாவை கொண்டாடுகின்றனர்.

ஆறு நாட்கள் நோன்பு: உலகில் மிகச்சிறந்த மருந்துவர் உங்கள் உடல். உலகில் மிகச்சிறந்த மருத்துவம் உண்ணாநோன்பு எனவேதான் உண்ணா நோன்பை வைத்து உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துள்ளனர் நம் முன்னோர்கள். நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் 'கந்த சஷ்டி விழா'.

உடல் ஆரோக்கியம்: வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும். உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்தி ஓய்வெடுக்கும். எனவே செரிமான சக்தியும், இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது. உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.

ஆறுமுகனுக்காக ஆறு நாட்கள்: உடலின் செரிமான சக்தி தான் பார்வதி. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தான் முருகன். உடம்பில் தோன்றும் நோய்தான் அரக்கன். வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது. ஆறு நாட்கள் விரதம் இருந்ததன் பலனாக நோய் என்னும் அரக்கனை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் அழிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி: முருகப்பெருமான் எப்படி தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று சூரசம்ஹாரம் செய்கிறாரோ அதேப்போல் நமது உடலில் உள்ள 'நோய் எதிர்ப்பு சக்தி' தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது. வெளியில் முருகனுக்கும்,அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.

என்ன சாப்பிடலாம்: விரத நாட்களில் எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம். நீரிழிவு நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

என்ன சாப்பிடலாம்: சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்கலாம். ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம். ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம். இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம். வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.

நச்சுக்கழிவுகள் வெளியேறும்: ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம். சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம். மலம் கருப்பாக வெளியேறலாம். சளி வெளியேறலாம். உடல் ஓய்வு கேட்கலாம். காய்ச்சல் வரலாம். வலிகளை உணரலாம். அதிக உடல் எடை சீராகும், முகம் பொழிவு பெறும். கண்ணில் ஒளி வீசும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். இரத்தம் தூய்மை பெறும். தோலின் நிறம் சீராகும். மன உளைச்சல் குறையும், கவலை, பயம், கோபம் குறையும். புத்துணர்வு கிடைக்கும். உடல் பலம் பெறும். மனம் அமைதி பெறும். ஆழ்ந்த தூக்கம் வரும்.

யாகசாலை: கந்தன் அரக்கனை சம்ஹாரம் செய்வது போல் உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா திங்கட்கிழமை 13ஆம் தேதி தொடங்கியது. தினந்தோறும் யாகசாலை பூஜைக்கு ஜெயந்திர நாதர் எழுந்தருகிறார். தேவர்களும் வீரர்களும் பாடல்களை பாடுகின்றனர். நாளை மறுநாள் திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் கோலாகலகமாகக் கொண்டாடப்பட உள்ளது.

சூரசம்ஹாரம்: சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள். கோவிலை சுற்றியுள்ள விடுதிகள், ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன. சூரனை சம்ஹாரம் செய்து தன்னோடு மயிலாகவும் சேவலாகவும் வைத்துக்கொள்வார் முருகப்பெருமான். அசுரனை வென்ற முருகப்பெருமானுக்கு 7ஆம் நாள் திருக்கல்யாணம் நடைபெறும்.

திருக்கல்யாணம்: 6 நாட்கள் கடும் விரதமிருந்த பக்தர்கள் சூரசம்ஹாரம் கண்டு விரதம் முடிப்பார்கள். திருக்கல்யாணத்தை கண்டு சொந்த ஊர் திரும்புவார்கள். சூரசம்ஹாரத்தை தொடர்ந்து 7ம் திருநாளன்று மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு முருகப்பெருமான் திருக்காட்சி அருளும் நிகழ்வும், தோள் மாலை நிகழ்ச்சியும் நடைபெறும். இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

தலையா? கடல் அலையா?: திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரதம் இருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருக்கல்யாணம் முடிந்து 20ம் டேதி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், பூம்பல்லக்கில் தெய்வானை அம்மனும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். 21ஆம் தேதிகளில் முருகப்பெருமானும் தெய்வானையும் ஊஞ்சல் காட்சி நிகழ்வு நடைபெறும். 24ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா உடன் கந்தசஷ்டி திருவிழா இனிதே நிறைவடையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+