கந்தசஷ்டி விரதம் மிஸ்ஸாயிருச்சா? முருகனின் அருளை பெற.. 2 அற்புதமான வழிபாடு.. எப்படி கடைப்பிடிப்பது?
சென்னை: கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ள முடியாமல் போனவர்களும், முருகனின் அருளை பூரணமாக பெற முடியும் எப்படி தெரியுமா? குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் 48 நாள் விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தை எப்போது கடைப்பிடிக்கலாம்?
முருகப்பெருமானுக்கு 3 விதமான விரதங்கள் இருப்பது வழக்கமாகும். சஷ்டி திதியில் விரதமிருப்பதை திதி விரதம் என்பார்கள்.. விசாகம், கிருத்திகை, பூரம் நட்சத்திரங்களில் இருப்பதை நட்சத்திர விரதம் என்பார்கள்.. செவ்வாய்கிழமைகளில் கடைப்பிடிப்பதை கிழமை விரதம் என்பார்கள்.

இதில், முருகனுக்கு கடைப்பிடிக்கப்படும் மிக நீண்ட விரதம், ஐப்பசி மாதத்தில் வரும் கந்தசஷ்டி விரதமாகும்.. இது ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும்.
குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு மிக முக்கியமான விரதமாக கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பேறு விரைந்து கிடைக்கும் என்றும், முருகனே குழந்தையாக பிறப்பார் என்றும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
குழந்தை வரம்: அதனால், குழந்தை வரம் பெற விரும்புபவர்கள் சஷ்டி தினங்களில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிற் மகா சஷ்டியில் 6 நாள் விரதம் கடைப்பிடிப்பது விசேஷமாகும். குழந்தை இல்லாதவர்கள் மட்டுமல்ல, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வேலை கிடைக்கவில்லை, எதிரிகள் தொல்லையால் இன்னலுக்கு ஆளாகுபவர்கள், வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாமல் தவிப்பவர்கள் கந்தசஷ்டியில் விரதம் இருக்கலாம்.
அந்தவகையில், கடந்த நவம்பர் 7 வியாழனன்று சஷ்டி விரதம் நிறைவு பெற்றது.. எனினும் ஒருசிலரால் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க முடியாமல் போயிருக்கலாம்.. சஷ்டி விரத நாளில் முருகனை வழிபட முடியாமல் போனாலும், வேறொரு உகந்த நாளை தேர்ந்தெடுத்து வழிபடுவதால் முருகனின் பூரண ஆசியை பெறலாம். எப்படி தெரியுமா?
சஷ்டி விரதம்: சஷ்டி விரதம் கடைபிடிக்க நீங்களே ஒரு நாளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். சூரிய உதயத்திற்கு முன்பே இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். அன்றையதினம், வீட்டின் பூஜையறையில் மனப்பலகையை போட்டு, அதில் அரிசியால் "அறுங்கோண சக்கரம்" கோலம் வரைய வேண்டும். இதன் நடுவே "சரவணபவ" என்று எழுதி, அறுங்கோண கோலத்தின் 6 முனைகளிலும் 6 மண் விளக்குகள் வைத்து நெய் தீபம் ஏற்ற வேண்டும். கோலத்தின் நடுவே 1 அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும்.
முருகனின் திருவுருவ படத்திற்கு அலங்காரம் அபிஷேகம் செய்து, முருகனுக்கு உகந்த நெய் வேதியங்களை படைத்து வழிபட வேண்டும்.. இப்படி தொடர்ந்து 9 அல்லது 11 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். இதனால், கந்த சஷ்டி விரதத்தை தவறவிட்டவர்கள் இந்த வழிபாடு செய்தால் முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
வளர்பிறை சஷ்டி: அதேபோல, துன்பமும், துயரமும் நீங்கி முருகனின் அருள் கிடைக்க, 48 நாள் விரதத்தையும் கடைப்பிடிக்கலாம்.. அனைத்து கிரகங்களும், அனைத்தும் நட்சத்திரங்களும், ராசிகளும் முருகப் பெருமானுக்குள் அடக்கம் என்பார்கள். எனவே, இந்த 48 நாள் விரதத்தை மேற்கொள்வோர், ஏதாவதொரு வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, விசாகம் போன்ற நாட்களிலிருந்து துவங்கலாம்.
தினமும் காலையில் குளித்து, திருநீறு அணிந்து, வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு, முருகனுக்கு சிவப்பு நிற மலர்கள் சாத்தி வழிபட வேண்டும். நைவேத்தியமாக ஏதாவது ஒரு பழம் அல்லது ஏதாவது ஒரு இனிப்பு செய்து வைக்கலாம். அல்லது தேனும், திணை மாவும் படைக்கலாம். தினமும் ஏதாவது ஒரு வேளை உணவு சாப்பிடாமல், வெறும், பால், பழங்களை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.. பெண்கள், மாதவிடாய் வரும் நாட்களில் மட்டும் விரதம் இருப்பதை தவிர்த்து, மற்ற நாட்களில் விரதம் இருக்கலாம்.
தாம்பத்யம்: குழந்தை வரம் வேண்டி, இந்த 48 நாள் விரதத்தை மேற்கொள்பவர்கள், 48 நாட்களும் தாம்பத்யத்தில் ஈடுபடக்கூடாது. மற்ற காரணங்களுக்காக, 48 நாட்கள் விரதம் மேற்கொள்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications