கற்பூரவள்ளி கலக்குதே.. மகிழ்ச்சி, பணத்தை டபுளாக்கும் அற்புத செடி.. கடனை தீர்க்கும் கற்பூரவல்ல.. அருமை
சென்னை: வீட்டில் கடன் பிரச்சனை தீர்ந்து, தோஷங்கள் நீங்க வேண்டுமானால், சிலவகையான செடிகளை வளர்க்கலாம்.. அந்தவகையில், கற்பூரவல்லி செடியும் ஒன்றாகும். மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் கற்பூரவல்லி தரும் வாஸ்து பலன்கள் என்னென்ன தெரியுமா?
குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க வேண்டுமானால், பல்வேறு பரிகாரங்களும், வழிபாட்டு முறைகளும், கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. .

வாஸ்து சாஸ்திரம்: இதற்காக வாஸ்து முறைப்படி சில தெய்வீக செடிகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கது துளசி செடியாகும். துளசி இலைகள்: எப்போதுமே தன்னுடனிருக்கும் எந்தப்பொருளின் மதிப்பையும், பல மடங்கு கூட்டும் தன்மை துளசிக்கு உண்டு
வீட்டில் துளசி இருந்தாலே, அங்கு அமைதி, செல்வம், தழைத்தோடும் என்பது நம்பிக்கையாகும்.. யாருடைய வீட்டில் துளசிசெடிகள் நிறைந்து காணப்படுகிறதோ, அந்த இடம் புண்ணியமான திருத்தலமாகவே கருதப்படுகிறது.. துளசி நிறைந்துள்ள இடத்தில், அகால மரணம், வியாதி எதுவுமே நெருங்காது.
துளசி செடிகள்: துளசியை வடகிழக்கு மூலையில் வளர்த்தால் வீட்டில் வறுமை நீங்கி, செல்வம் பெருகுவதுடன் தெய்வீக அருளும் பெறப்படும்... அதாவது தன்னை சேர்ந்த எதையும் தோஷங்களை நீக்கிப் புனிதப்படுத்திவிடும் ஆற்றலுடையது துளசி. திருமாலின் மார்பில் நீங்காது நின்றாடுவது இந்த துளசி செடிதான்.. எனவே, துளசி செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்து பூஜை செய்ய வேண்டும்
துளசியை போலவே, சந்தன முல்லை, பவளமல்லி, பன்னீர் செடி, திருநீர்பத்திரி போன்றவற்றையும் சொல்லலாம். இதில் கற்பூரவல்லியை எடுத்துக் கொண்டால், ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது.. இந்த கற்பூரவல்லி செடி மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது.. இந்த செடியை நாம் தினந்தோறும் பார்க்க நேரிட்டாலே, நம்முடைய வீட்டில் செல்வம் பெருகுமாம்.
கற்பூரவல்லி: அதனால், வீட்டிலேயே சிறிய தொட்டியில் கற்பூரவல்லி செடியை வளர்ப்பது நல்லது... இதனால், வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தாலும் வெளியேற்றிவிடும்.. குடும்பத்தில் தேவையற்ற செலவுகளை குறைத்து, வருமானத்தை பெருக்கக்கூடியது இந்த கற்பூரவல்லி.. கடன் பிரச்சினை தீர மிகச்சிறந்த செடி என்று வாஸ்து சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
எனவே, கற்பூரவல்லி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றும்போது, நம்முடைய கடன் பிரச்சினையும் தீர்ந்து, வருமானம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டு கொள்ள வேண்டுமாம்.
கறிவேப்பிலை: அதேபோல, ஜாதி முல்லை, மல்லிகை, தாமரை, தும்பை, பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்க்கலாம்.. இதனால் மனை தோசங்கள் சரியாகும்.. பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கக்கூடியது. இந்த இரண்டு மரங்களையும் வீட்டில் நன்றாக கவனித்து வளர்க்க வேண்டும்..!!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications