Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லட்சுமி தேவியின் அருள் நிறைந்த கார்த்திகை மாத வாஸ்து நாள்.. வீடு கட்ட ஆரம்பிங்க விடியல் நிச்சயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை மாத வாஸ்து நாளில் பூமி பூஜை செய்து வீடு கட்டத் தொடங்கினால் மகாலட்சுமியின் அருளால் மளமளவென பணிகள் நிறைவடையும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

வீடு கட்டும் யோகம்: சொந்த வீடு கட்டுவது அல்லது வாங்குவது என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்று ஆசை பலருக்கும் உண்டு. வீடு கட்டுவது என்பது சாதாரண விசயமில்லை அது எல்லோருக்கும் கைகூடி வருவதில்லை. நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம்.

Karthigai Month vasthu day : Karthigai Matha vastu day build your own house grace of the goddess Sri Lakshmi

யாருக்கு சொந்த வீடு அமையும்: ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் அமைவதைப் பொறுத்து மாடமாளிகையில் வசிக்கும் யோகம் அமைகிறது. ஒருவருக்கு சொந்த வீட்டுமனை அமைய ஜாதகத்தில் நான்காம் பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும்.

ஒருவருக்கு என்ன தான் செவ்வாய் திசை நடந்து, சொந்த வீடு யோகம் இருப்பினும் சிலருக்கு வீடு கட்ட துவங்கிய வேலையை மடமடவென்று முடிக்காமல், பாதியிலேயே நின்று விடும். இதற்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் வீடு கட்ட ஆரம்பித்த மாதமாக இருக்க மிக வாய்ப்பு உண்டு.

வாஸ்து பிரச்சினை: வீடு கட்ட ஆரம்பிக்கும் போது ஜோதிட ஆலோசனை பெறுவது போல வாஸ்து சாஸ்திரத்தையும் பார்க்க வேண்டும். வாஸ்து சாஸ்த்திரத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் வீடு கட்ட ஆரம்பித்தால் பணம் விரயமாகுமே தவிர விரைவில் முடியாமல் இழுத்துக் கொண்டே செல்லும். எத்தனையோ கட்டிடங்கள் வீடு கட்ட ஆரம்பித்து பாதியிலேயே நிற்கும் அதற்குக் காரணம் வாஸ்து பிரச்சினைதான்.

வாஸ்து பூஜை செய்யும் மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். அவ்வாறு செய்யும் நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது. வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை.

பஞ்ச பூத சக்திகள்: கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.

எந்த மாதத்தில் வீடு கட்டலாம்: சித்திரை மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் வீண் செலவு உண்டாகும். அதே நேரத்தில் சித்திரை மாதம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் அவர்கள் வீடு கட்ட ஆரம்பிக்கலாம். வைகாசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் செயலில் ஜெயம் ஏற்படும். இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏற்ற மாதம்.

சுபிட்சம் ஏற்படும்: ஆனி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் மரண பயம் ஏற்படும். இந்த மாதத்தில் வாஸ்து நாள் இல்லை. ஆடி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு நோய் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது கால்நடைகள் இல்லாதவர்கள் கவலைப்பட தேவையில்லை. ஆவணி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் குடும்ப உறவில் ஒற்றுமை ஏற்பட்டு சுபிட்சம் உண்டாகும்.

கார்த்திகை மாத வாஸ்து: புரட்டாசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் ஏற்படும் மறந்தும் கூட புரட்டாசியில் வீடு கட்டத் தொடங்க வேண்டாம்.ஐப்பசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் உறவினரால் கலகம் உண்டாகும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. செவ்வாய் பகவானை வணங்கி விட்டு வீடு கட்ட ஆரம்பிக்கலாம். கார்த்திகை மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் லட்சுமி தேவியின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

பொன், பொருள் சேர்க்கை: மார்கழி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் வீடு கட்ட ஆரம்பித்தால் சுவர் எழுப்ப முடியாமல் தொடர்ந்து தடைகள் வந்த வண்ணம் இருக்கும். இந்த மாதத்தில் வாஸ்து நாள் இல்லை எனவே வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டாம். தை மாதத்தில் வீடு வீடு கட்ட ஆரம்பித்தால் கடன் சுமை அதிகரிக்கும் தவிர அக்கினி பயம் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. தை மாதம் சாதகமாக உள்ள ராசிக்காரர்கள் வீடு கட்ட ஆரம்பிக்கலாம். மாசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் சகல சௌபாக்கியம் கிடைக்கும். பங்குனி மாதத்தில் வாஸ்து நாள் கிடையாது எனவே இந்த மாதத்தில் வீடு வீடு கட்ட ஆரம்பித்தால் பொன், பொருள், பண விரயம் உண்டாகும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Karthigai Month vasthu day : Karthigai Matha vastu day build your own house grace of the goddess Sri Lakshmi

வாஸ்து பூஜை செய்ய ஏற்ற நேரம்: 2023 ஆண்டின் கடைசி வாஸ்துநாள் நாளைய தினம் 24.11.23 வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில் பகல் 11.29 முதல் 12.05 வரை வாஸ்துபூஜை செய்ய ஏற்ற நேரம். அவரவர் தங்களின் ஜோதிடர்களைக் கலந்து ஆலோசனை செய்து பூமிபூஜை முதலான காரியங்களைத் தொடங்கலாம்.

சொந்த வீடு கட்டலாம்: பொதுவாக வாஸ்து நாளில் சொந்த வீட்டில் வசிப்பவர்களும், வாடகை வீட்டில் வசிப்பவர்களும் வீட்டை சுத்தம் செய்து, நிலைப்படிகளுக்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடலாம். சொந்த வீடு சுபிட்சமாக இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விரைவில் சொந்த வீடு கட்டுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

பரிகாரம்: வீடு கட்டும் யோகம் தருபவர் செவ்வாய் பகவானும் முருகப்பெருமானும்தான். தடைகள் நீங்கி வீடு கட்டும் யோகம் வர வேண்டும் என்றார் செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும். 11 செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வழிபட சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+