Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திகை பவுர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நல்ல நேரம்.. என்னென்ன நன்மைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நல்ல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபத்திருநாள் கொண்டாடப்படும் நாளில் அதுவும் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் கிரிவலம் வருவது பலவித நன்மைகளை தரக்கூடியதாக உள்ளது.

கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷப ராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும்.

Karthigai Pournami Devotees Girivalam sella Nalla Neram at Annamalaiyar temple Tiruvannamalai

திருவண்ணாமலையில் மலையாக அருளும் சிவன் ஜோதி ரூபத்தில் பக்தர்களுக்கு அருளும் நாளே கார்த்திகை தீப திருவிழா நாளாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமி நாளில் சிவபெருமான் அக்னி பிளம்பாக விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஓங்கி உயர்ந்து நின்று அருள்பாலித்த நாள்.

பரம்பொருள் அளவிற்கறியது என்பதை இப்பூலகில் வாழும் மக்களுக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள் ஒரு கார்த்திகை மாத பவுர்ணமி தினம். தீபத்திருநாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் ஆலயங்களில் விளக்கேற்றி இறைவனை வழிபட வாழ்வில் நன்மைகள் நடைபெறும்.

கார்த்திகை பவுர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும். பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறை சிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும் .

கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னதானம் தருவது சிறப்பானது. சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், நமது பாவங்கள் நீங்கும். அருணாசலத்தை வலம் வரவேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்துவைத்தால், யாகம் செய்யும் பலன் கிடைக்கும் .
கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும். வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் .

திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தன்று வலம் வருவதற்கு காரணம் உள்ளது. அன்றுதான் அன்னை பராசக்தி, அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்றாள். அன்று சந்திரன் சூரியனிடம் இருந்து சக்திகளை அதிக அளவில் பெற்று, அதை வெளியிடும் பூர்ண நிலாவாக உலா வருகிறான். அந்த ஒளி, மலை மீது பட்டு பிரதிபலிக்கும்போது, அது நமது உடலுக்கும் நம் மனதுக்கும் பற்பல நன்மைகளை நமக்குத் தெரியாமலே செய்கின்றது. இதனால் பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது.

ஞாயிற்றுக் கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும். திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். அஷ்டமி தினத்தில் கிரிவலம் வந்தால் தீவினைகள் போகும்.

கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் 26ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 27ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பவுர்ணமி முடிவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது என திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+