Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரேஸ்லேட்டை கருங்காலியில் அணியலாமா? 5 முக ருத்ராட்சையை கையில் அணிவதால் அபார நன்மை.. கரெக்ட்டான நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது.. அதிலும் பல குறைகளை குணப்படுத்தும் தன்மை அதிகமாகவே உள்ளது.. அனைத்து உலோகங்களை விடவும் மிகவும் பழமைவாய்ந்த உலோகமாக கருதப்படுவது தாமிரம்தான். எனவேதான் இதனை பெரும்பாலானோர் பிரேஸ்லெட்டாக கையில் அணிந்திருப்பார்கள்.. அந்தவகையில், உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து, பாசிட்டிவ் ஆற்றலை தரக்கூடிய 2 வகையான பிரேஸ்லெட்களை பற்றி, இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

கருங்காலி மரத்திலிருந்து பெறப்படும் மாலையானது, மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.. தோஷங்களை நீக்கக் கூடியது என்பதால் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலையை அணிவார்கள்.. உடலிலுள்ள பல நோய்களையும், மனதிலுள்ள ஆன்மாவையும் பலம் பெற செய்யக்கூடிய சக்தி இந்த கருங்காலிக்கு உண்டு.

Spiritual Karungali Bracelet 5 Mukhi Rudraksha

நேர்மறையான ஆற்றலை ஈர்த்து, ஆரோக்கியத்தை பெருக்கக்கூடியது கருங்காலிகள்.. கழுத்தில் பலரும் மாலையாக அணிவது போல, கையில் பிரேஸ்லெட்டாகவும் பலரும் பயன்படுத்துகிறார்கள்.. இப்படி அணிந்து கொள்வதால், தீயவை அண்டுவதில்லை, செல்வம் ஈர்க்கப்படுகிறது.

பெண்கள் அணியலாமா

எனினும், நேரடியாக கருங்காலியை கையில் அணியாமல், அதற்குரிய சரியான வழிமுறைகளை கடைபிடித்து அணிவதால், முழு பலனையும் பெற முடியும்.

மலட்டுத் தன்மையை நீக்கக்கூடிய தன்மை கருங்காலிக்கு உண்டு.. மாலையாக இருந்தாலும் பிரெஸ்ட்டாக இருந்தாலும் பெண்களும் அணிந்து கொள்ளலாம். ஆனால், மாத விலக்கு நாட்களின் போது கழற்றி வைத்து விட்டு, அதற்குபிறகே அணிய வேண்டும் என்பார்கள்.. அதேபோல, ஒருமுறை மாலை கழற்றி வைத்தால், அதை மறுடிபயும் அணியும் முன்பு நீரில் கழுவி உபயோகிக் வேண்டும். இறந்தவர்கள் வீட்டிற்கு செல்லும்போது இதனை அணிந்து செல்லக்கூடாது.

ருத்ராட்சத்தின் நன்மை

அதேபோல, ருத்ராட்சத்தையும் கைகளில் அணியலாம்.. ஆண்டிபயாடிக் நிறைந்த ருத்ராட்சைகள், நோய் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாக்கக்கூடியது.. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யக்கூடியவை. மன பதற்றம், மன அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய நோய்கள், புற்று நோய்கள் என பல்வேறு நோய்களை போக்கக்கூடியது.

ஒரு ருத்ராட்ச மணியில் எத்தனை கோடுகள் உள்ளதோ, அத்தனை முகங்கள் கொண்டதாக சொல்வார்கள்.. அதிலும், 5 முக ருத்ராட்சம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.. இதனை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.

5 முக ருத்ராட்சம்

அந்தவகையில, 5 முக ருத்ராட்சத்தை பிரேஸ்லெட்டுகளாக அணியலாம்.. ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பவர்கள் இந்த பஞ்ச முக ருட்ராட்சத்தை பிரேஸ்லெட்டை அணியும்போது, உடலும், மனமும் வலுப்பெருகிறது.. மன அழுத்தம் விலகுகிறது.. தீய சக்திகள் நெருங்குவதில்லை.. காமம், அகங்காரம், மோகம், பொறாமை, பேராசை போன்ற துர்குணங்கள் நீங்கி, மனம் தெளிவு பெறுகிறது.

எதிர்பாராத விபத்து, மரணங்களை முன்கூட்டியே தடுக்கும் கவசமாக செயல்படுகிறது.. தொழிலில் ஏற்றம் காண முடியும்.. திருஷ்டி., நெகட்டிவ் எனர்ஜி, பில்லி, சூனியம் போன்றவற்றை நெருங்க விடாமல் செய்துவிடும்.

பஞ்ச முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டை எப்படி அணியலாம்?

கங்கை நீரில் அல்லது உப்பு நீரில் இந்த ருத்ராட்ச பிரேஸ்லெட்டை சில மணி நேரம் ஊற வைத்து அதற்கு பிறகே சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். ஆனால், அணியும் முன்பு 11 முறை "ஓம் நம சிவாய" என்று உச்சரித்து அணிய வேண்டும்.

திங்கட்கிழமை சிவனுக்கு உரிய நாள் என்பதால், அன்றைய தினம் காலை நேரத்தில், இந்த பிரேஸ்லெட்டை அணிவது சிறப்பாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+