Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழுத்தை முறிக்கும் கடன் தீர வெற்றிலை தீபம்.. இந்த 2 தீபம் ஏற்றினாலே போதும்.. பயனுள்ள தாமரை பூக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் தொல்லையிலிருந்து விடுபடவேண்டுமா? சொந்தமாக வீடு கட்ட வேண்டுமா? வீட்டிலுள்ள இன்னல்கள் தீர வேண்டுமா? இது அனைத்துக்குமே தீர்வு கிடைக்க முருகப்பெருமானை நாடலாம். 2 விதமான பரிகாரங்கள் செய்வதன்மூலம், முருகனின் அருளும், ஆசியும் கிடைத்து, கடன் பிரச்சனைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

எவ்வளவு பணம் வந்தாலும், அது தண்ணீராய் செலவாகிவிடும்.. கடன் தொல்லையும் விரட்டிக் கொண்டேயிருந்தால், முருகனை வழிபடுவது நல்லது என்று நம்பப்படுகிறது.

spirituality pariharam

கடன் தொல்லையை நீக்க முருகனை, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து, மாலை வேளைகளில் முருகன் சன்னிதியில் 12 முறை பிரதட்சணம் செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டு வரவேண்டும். குறிப்பாக, கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதமிருந்து தரிசித்து வந்தால் கடன்கள் தீர வழி வகைகள் பிறக்கும்.

தாமரை மாலை: திருச்செந்தூர் முருகப்பெருமானின் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். 6 வெள்ளை தாமரை பூக்களை, உங்கள் கையாலேயே ஊசி நூலால் மாலை போல் கோர்த்து கட்ட வேண்டும். இதை செவ்வாய்கிழமைகளில் முருகப் பெருமான் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வைத்து , தாமரை மாலையையும் போட்டு, உங்களுடைய வேண்டுதலை வேண்டிக் கொள்ளவேண்டும்.
இப்படி 9 செவ்வாய்கிழமைகளில் முருகனுக்கு வெண்தாமரை மாலை கட்டி போட்டு வருவதால், விரைவில் நல்ல மாற்றம் குடும்பத்தில் நடப்பதை காணலாம்.

அதேபோல, எப்போதுமே கடன் இல்லாத வாழ்க்கை அமைய வேண்டுமானால், 11 ரூபாய் காணிக்கை பரிகாரம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில், முருகர் படத்துக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி மாலை சூட்ட வேண்டும். ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி, தீபமேற்றி வைத்து, எளிமையான நெய்வேத்தியம் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும்.

கடன் தொல்லை: இப்போது ஒரு சிகப்பு நிற துணியில் 11 ரூபாய் காணிக்கையாக கட்டி முருகர் படத்தின் முன்பு வைத்தவிட்டு, கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு அருகிலுள்ள முருகர் கோயிலுக்கு சென்று, நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ, அவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி 6 வாரங்கள் தொடர்ந்து செய்யும்போது, முடித்து வைத்திருக்கும் நாணயத்தை , முருகர் கோயிலிலுள்ள உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இதனால் எளிதில் உங்கள் கடன் அடையும்.

வெற்றிலை தீபம்: அதேபோல, வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற தீராத வேட்கை இருந்தால், செவ்வாய்க்கிழமைகளில் முருகனுகக்கு வெற்றிலையில் தீபம் ஏற்றி வரலாம்.. இதற்கு 6 முழு வெற்றிலைகளை எடுத்து கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பூஜையறையில் முருகப்பெருமானுக்கு ஒரு மனையை அமைத்து அதில் மஞ்சள் தெளித்து, கோலமிட்டு, அதில் முருகனின் படம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும் .

பிறகு, சஷ்டி திதியில், உங்கள் செலவில் ஒரு செங்கல்லை வாங்கி வந்து, வீட்டின் பூஜையறையில் மஞ்சள், குங்குமம் வைத்து, இதையும், முருகனுக்கு அருகில் வைத்துவிட வேண்டும். இப்போது 6 விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரியேற்றி ஒவ்வொரு விளக்கையும் ஒவ்வொரு வெற்றிலையில் வைக்க வேண்டும்.

சர்க்கரை பொங்கல்: சர்க்கரை பொங்கல், பாயாசம், வடை, சுண்டல் இப்படி ஏதாவது பிரசாதமாக வைக்கலாம். இப்போது, தீபமேற்றி, தூப, தீப ஆரத்தி காண்பித்து, உங்கள் விருப்பத்தை வேண்டிக் கொள்ளலாம். ஒவ்வொரு செவ்வாய்களில் இதை செய்துகொண்டே வருவதுடன், புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தால், விரைவில் அனைத்தும் ஈடேறும்.. அப்போது, பூஜையறையில் வைத்த செங்கலை, முதல் அஸ்திவாரமாக பயன்படுத்தலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+