பீரோ, கட்டிலுக்கு அடியில் எலுமிச்சம் பழம் வெச்சிடுங்க.. சூப்பர் மாற்றத்தை தரும் எலுமிச்சை பரிகாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வைட்டமின் C நிறைந்த எலுமிச்சம்பழம், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை குறைக்கிறது, மேலும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது. சிட்ரிக் அமிலத்தை தரக்கூடிய இந்த எலுமிச்சை, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.. இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. மருத்துவ குணங்களை அபரிமிதமாக கொண்ட எலுமிச்சை, ஆன்மீகத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. அந்தவகையில், ஒரே ஒரு எலுமிச்சம் பழம் ஆன்மீகத்தில் தரும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
சுபகாரியங்கள் துவங்குவதற்கு முன்பு, நல்ல காரியத்துக்கு கிளம்பும் முன்பு, மூன்று எலுமிச்சையை அம்மன் கோவில் வாசலின் முன்புறமுள்ள திரிசூலத்தில் சொருகிவிட்டு செல்வது வெற்றியை தரும்.

குழந்தை பாக்கியம்
குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருந்தாலோ அல்லது குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தாலோ, அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தின் மாலையை சாற்றுவது நல்லது. துர்கை, பத்ரகாளி போன்ற உக்ர அம்மன்களுக்கும் எலுமிச்சையில் மாலை சாத்திவரும்போது, வெற்றிகள் உண்டாகும். எலுமிச்சை பழத்தில் துர்கா தேவிக்கு ராகுகாலத்தில் தீபம் ஏற்றும்போது பல பிரச்னைகள் தீர்கின்றன.
எதிர்மறை ஆற்றலை விரட்டக்கூடிய சக்தி எலுமிச்சைக்கு உண்டு. மந்திரங்களை கிரகிக்கும் சக்தியும் எலுமிச்சைப்பழத்துக்கு உள்ளது.. எனவே, பாசிட்டிவ் சக்தியை வீட்டிற்குள் அதிகரிக்கிறது எலுமிச்சைகள்.. அதனால்தான், துர்கா தேவிக்கு ராகுகாலத்தில் தீபம் ஏற்றுவார்கள்.. இதனால், எண்ணற்ற இன்னல்களுக்கு தீர்வு கிடைக்கும்.
திருஷ்டி கழிக்கும்
கண் திருஷ்டியை போக்கக்கூடிய எலுமிச்சைகள், நோய், கடன் தொல்லை, இன்னல்கள், போன்றவைகள் நெருங்க காரணமாக உள்ள எதிர்மறை ஆற்றலையும் வீட்டிலிருந்தே விரட்டக்கூடியது. எலுமிச்சம்பழத்தை நான்கு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான தட்டில் கல் உப்பு கொட்டி, அதில் எலுமிச்சையை வைத்து, பீரோ அல்லது கட்டிலுக்கு அடியில் வைக்கலாம். பிறகு இந்த எலுமிச்சை மற்றும் உப்பினை கை படாமல் எடுத்து, ஒரு கவரில் வைத்து வெளியே வீசிவிடலாம். இது வீட்டிற்குள் உள்ள திருஷ்டியை போக்கும்.
எலுமிச்சை - கவனம்
திருஷ்டி கழிப்பதாக இருந்தால், எலுமிச்சையை இரண்டாக அறுத்து, அதில் குங்குமம் தடவி விட வேண்டும். பிறகு திருஷ்டி கழிக்கும் நபரை கிழக்கு பக்கமாக நிற்க வைத்து மூன்று முறை சுற்ற வேண்டும். இறுதியாக நான்கு திசைகளிலும் எலுமிச்சையை வீசிவிட வேண்டும். இந்த பழம் காய்ந்து போகும்வரை யார் காலிலும் மிதிபடக்கூடாது.
எலுமிச்சை பழத்தை கடனாக யாரிடமும் வாங்க கூடாது. பரிகாரம், திருஷ்டி எலுமிச்சையை தொடக்கூடாது. எலுமிச்சை தீபத்தை கோவிலில் ஏற்றலாம், ஆனால், வீட்டில் ஏற்றக்கூடாது.. அதேபோல, கோயிலிலிருந்து பிரசாதமாக வாங்கி வரும் எலுமிச்சையில் திருஷ்டி கழிக்கக்கூடாது. திருஷ்டி என்றாலே, பிரத்யேகமாக பழத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
உத்திரசங்கு + படிகாரம்
எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்கவிடுவதும் நல்லது. அதேபோல, வண்டி வாகனங்களில் முன்புறத்தில் 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விடலாம். 21, 54, 108 எண்ணிக்கையில் சார்த்தப்பட்ட எலுமிச்சம் பழ மாலைகளில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட எலுமிச்சம் பழங்களை வெளியூர் பயணங்களின்போது கையோடு கொண்டு செல்வது நல்லது.
More From
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications