வாஸ்து டிப்ஸ்.. அக்னி மூலை.. சமையல் அறையில் செய்யும் சிறு தவறு.. வருமானத்தை பாதிக்குமாம்!
சென்னை: நம்முடைய சமையல் அறையில் சுவைக்காக மட்டுமே சமைப்பதில்லை. நம்முடைய உணவு உடலில் சத்தாகவும் மாறி ஆரோக்கியத்தை தருகிறது. நம்முடைய சமையல் அறையில் வாஸ்து சரியாக இருந்தால் அது நமது சந்ததியை பாதுகாக்கும் செல்வ வளத்தை அதிகரிக்கும். சமையல் அறையில் என்ன இருக்க வேண்டும் என்ன இருக்கக் கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பஞ்சபூதங்களையும் சமமாக பாவித்து அதற்கேற்ப வீடு, கட்டிடம் கட்ட வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி கட்டிட அமைப்பு இருந்தால் அந்த வீட்டில் நற்காரியங்கள் நிறைய நடைபெறும். பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்திருக்கும். நீரும் நெருப்பும் அதிகம் பயன்படுத்தப்படும் சமையல் அறையில் நாம் செய்யும் சில தவறுகள் பெண்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நம்முடைய சமையல் அறையில் நாம் வாஸ்து தோஷங்கள் எதுவும் இல்லாமல் சரியான முறையில் பொருட்களை வைத்திருப்பது அவசியம்.

பெண்கள் அதிகம் உபயோகப்படுத்தும் இடம் சமையல் அறை. ஆற்றல் சக்தி அதிகம் பயன்படும் இடமும் சமையல் அறைதான். சமையல் அமைப்பதற்கு சரியான திசை சமையல் அறைதான். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியமே சமையல் அறையில்தான் இருக்கிறது. சமையல் அறை சரியாக இருந்தால் பண வருமானம் நன்றாக இருக்கும். அந்த வீடு செல்வ செழிப்பு நிறைந்ததாக இருக்கும்.
ஒரு வீட்டின் தென் கிழக்கு அக்னி மூலை. நம்முடைய வீட்டில் சமையல் அறை இருக்கும் இடம் அக்னி மூலைதான். இந்த இடம்தான் சரியான இட.ம். ஒரு சிலர் வாயு மூலையான வடமேற்கு பகுதியிலும் கிச்சன் வைத்திருப்பார்கள். நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால்தான் அந்த வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிக வருமானம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எனவேதான் தென்கிழக்கு பகுதியை சமையல் அறையாக பயன்படுத்தினால் அக்னி மூலை வலிமையடையும். பெண்களின் மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
எந்த காரணத்திற்காகவும் வடகிழக்கு திசையில் சமையல் அறை கட்டக்கூடாது. நீர் திசையில் நெருப்பான சமையல் அறை அமையக்கூடாது. நீரும் நெருப்பும் மோதிக்கொண்டால் அந்த வீட்டில் சந்தோஷம் மறைந்து போகும் நிம்மதி இருக்காது. தென் கிழக்கில் உள்ள சமையல் அறையில் கிழக்கு நோக்கி நின்றுதான் சமைக்க வேண்டும். கிழக்கில் இருந்து சூரிய ஒளி சமையல் அறைக்குள் வர வேண்டும். சமையல் அறையில் வெளிர் மஞ்சள், ஆரஞ்ச், போன்ற வண்ணங்களை சுவர்களில் பயன்படுத்தலாம். கருப்பு நிறத்தை சமையல் அறையில் பயன்படுத்தக்கூடாது.
நம்முடைய சமையல் அறையில் குப்பை தொட்டியை பயன்படுத்தும் போது மேற்கு திசை அல்லது வடமேற்கில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் நேர்மறை சக்தி அதிகரிக்கும். அதே போல சமைத்து முடித்து விட்டு இரவு உறங்கப்போகும் முன்பாக நாம் அழுக்கான பாத்திரங்களை அப்படியே சிங்க்கில் போட்டு வைக்கக்கூடாது. நன்றாக சுத்தம் செய்து விட்டு சமையல் அறை மேடையையும் சுத்தமாக செய்து வைத்து உறங்கப்போனால் வீட்டின் நேர்மறை ஆற்றல் சக்தி அதிகரிக்கும்.
சமையல் அறையில் பாத்திரங்களை சரியான முறையில் அடுக்கி வைக்க வேண்டும். தண்ணீர் குழாய்களில் கசிவு இருக்கக்கூடாது. தண்ணீர் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ஒழுகிக் கொண்டிருந்தால் அது நிதி இழப்பை ஏற்படுத்தும். சமையல் அறை ஸ்டோர் ரூமில் மளிகைப் பொருட்களை நாம் தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
சமையல் அறையில் வடக்கு, வடகிழக்குப் பகுதியில் அதிகம் பாரம் இல்லாத பொருட்களை வைக்க வேண்டும். சமையல் அறையில் தண்ணீர் குடங்களையும் சமையல் அடுப்பையும் ஒரே மேடையில் வைக்காதீர்கள் அது வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். நமது வருமானத்தை மட்டுமல்ல நமது தலைமுறையின் வருமானத்தையே அது பாதிக்கும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications