தீப திரி.. சாதாரண விசயமில்லை.. வாழைத்தண்டு.. தாமரைத்தண்டு திரி.. சாஸ்திரம் சொல்வதென்ன?
சென்னை: நம்முடைய வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபடுவோம். அதே போல கோவிலுக்கு சென்றாலும் விளக்கேற்றி வழிபடுவோம். ஒளி வடிவத்தில் இறைவன் அருள் பாலிக்கிறார் என்ற நம்பிக்கையில் நாம் விளக்கேற்றுகிறோம். பஞ்சு திரி, பசு நெய், நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவது பாரம்பரியமானது. இன்றைக்கு பல வண்ண நிறங்களில் உள்ள திரிகளில் தீபம் ஏற்றுகின்றனர். அப்படி செய்யலாமா சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
தீபங்கள்: பசுநெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவது மகாலட்சுமியின் அருளை கொடுக்கும். நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினாலும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, ஐந்து முக விளக்கு என எத்தனையோ விளக்கு வகைகள் உள்ளன. அவரவர் வசதிக்கு ஏற்ப தீபங்களில் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

சாஸ்திரம் சொல்வதென்ன: கோவில்களில் பெரும்பாலும் அகல் விளக்கு தீபம்தான் ஏற்றி வழிபடுவார்கள். பைரவருக்கு பூசணிக்காய் தீபம் ஏற்றுகின்றனர். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுகின்றனர். சிலரோ தேங்காயில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். சிலர் அகல் விளக்கிலேயே பல வித நிறங்களில் திரி போட்டு வழிபடுகின்றனர். இது நல்லதா? இப்படி பல நிறங்களில் திரி போட்டு தீபம் ஏற்றலாமா என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
பஞ்சுத்திரி: பொதுவாக பருத்தியினால் உள்ள பஞ்சில் இருந்து திரித்து எடுக்கப்படுகின்ற திரி வீடுகளிலும் கோவில்களிலும் தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும்.
பருத்தி நூல் திரி: பருத்தி நூலால் செய்யப்பட்ட திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றுவார்கள். திரி என்றால் 3 எனவே மெல்லிசான மூன்று நூல்களைக் கொண்ட திரியால் தீபம் ஏற்ற வேண்டும். பருத்தியால் ஆன வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின்அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது செல்வ வளத்தை அதிகரிக்கும்.
சிவப்பு நூல் திரி: திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் சிவப்பு நூல் திரி ஏற்றுவார்கள். எதிரிகள் தொல்லை ஒழிய, கடன் பிரச்சினை தீர தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிவப்பு நூல் தீப திரி, சிவப்பு துணியில் மிளகு கட்டி தீபம் ஏற்றுவார்கள்.
மஞ்சள் திரி: நினைத்த காரியங்களில் வெற்றி பெற விரும்புபவர்கள் மஞ்சள் திரி கொண்டு தீபம் ஏற்றுவார்கள். அம்மனின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் கோளாறுகள் நீங்கவும், எதிரி பயம் நீங்கவும். மஞ்சள் நிற திரியால் தீபம் ஏற்றலாம்.
வாழைத்தண்டு நார் திரி: முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு வாழைத்தண்டு திரியால் தீபம் ஏற்றி வழிபடலாம். குடும்ப ஒற்றுமை, மன அமைதி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது. வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலாக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கேற்றலாம்.
தாமரைப்பூத்தண்டு திரி: இந்த திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். மறுபிறப்பற்ற நிலை உருவாகும். தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்த வேண்டும்.
வெள்ளெருக்கந்திரி: வெள்ளெருக்கந்திரியால் தீபம் ஏற்றினால் கெட்ட ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும். வெள்ளெருக்கந்திரியானது கடன் பிரச்சினை தீர்க்க உதவும். செல்வச்செழிப்பு உண்டாகும். வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தலாம்.
இந்த திரிகளை பயன்படுத்தி தீபம் ஏற்றுவது அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில்தான். எந்த சாஸ்திரங்களிலும் இந்த திரி ஏற்றுங்கள் என்று நிறங்களைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. முன்னோர் காலத்தில் இருந்தே பஞ்சு திரியும் பசு நெய், நல்லெண்ணெய் பற்றிதான் குறிப்பிட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications