Lunar eclipse 2023: புத்த பூர்ணிமா நாளில் நிகழும் சந்திர கிரகணம்..எங்கு பார்க்கலாம் - முழு விபரம்
சென்னை: இந்த ஆண்டின் சந்திர கிரகணம் 2023 மே 5ம் தேதி புத்த பூர்ணிமா நாளான வெள்ளிக்கிழமை அன்று நிகழ உள்ளது. இது பகுதி சந்திர கிரகணமாக பெனும்பிரல் சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். இந்தியாவில் தெரியாது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது.

முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம் என்று மூன்று வகையான சந்திர கிரகணங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். கிரகணங்களைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் இது முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும்.
பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். கடந்த 20ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில் வரும் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று 4 மணி நேரம் சந்திர கிரகணம் நிகழ உள்ளது என்றாலும் இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியாது என்பதால் கிரகண தோஷம் எதுவுமில்லை.
இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும். மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் தெரியுமாம்.
இந்த பகுதி சந்திர கிரகணம் உலக நேரப்படி மே 5ம் தேதி மாலை 3.14 மணிக்கு தொடங்கி 7.31 மணி வரை தெரியும். இந்திய நேரப்படி இந்த பக்தி சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52.59 மணிக்கு ஏற்படும். இந்த கிரகணம் மே 6ம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறைவடைகிறது. சந்திர கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்றும் கர்ப்பிணிகள், நோயாளிகள் வெளியே வரக்கூடாது என ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications