இனி மதுரையன்ஸ கையில பிடிக்க முடியாது..வருது சித்திரை திருவிழா! மீனாட்சி, அழகர் தரிசனத்துக்கு ரெடியா?
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா பணிகள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. ஏப்ரல் 29 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே -8 ஆம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், மே 9ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் பல இடங்களில் இப்போதே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை மட்டுமல்ல தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய விழா என்றால் அது மதுரை சித்திரை திருவிழா தான். மதுரையை அரசாலும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை மணமுடித்து அண்ணன் கள்ளழகரை பார்க்க காத்திருக்கும் சித்திரை திருவிழாவில் மதுரையே குலுங்கி தான் போய்விடும்.
16 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதும் முக்கிய வைபவங்கள். திருவிழா என்றாலே மதுரை தான், மதுரை என்றாலே சித்திரைத் திருவிழா தான்.

16 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெற்றாலும், சித்திரைத் திருவிழா தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு பெண்கள் புது தாலி கயிறு மாட்டிக்கொண்டால் மீனாட்சியைப் போலவே தாங்களும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அடைவோம் என்பது நம்பிக்கை.
அதுமட்டுமல்லாமல் கள்ளழகர் மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக மதுரைக்கு வரும்போது வைகை ஆற்றில் இறங்கும் வைபோகத்தைக் காண கண் கோடி வேண்டும். சித்திரை திருவிழாவில் 16வது நாளில் தேவேந்திர பூஜை, அதனை தொடர்ந்து மலைக்குச் சென்று அடைவதுடன் சித்திரை திருவிழா நிறைவடையும். இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடக்கிறது. அன்றைய தினம் தன்னுடைய சகோதரன் பெருமாளுக்கு உகந்த ஏகாதேசியில் திருக்கல்யாணம் நடைபெறுவது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் மகாலட்சுமி அவதரித்த உத்திரம் நட்சத்திரத்திலும் திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான பணிகள் தொடங்கும் வகையில் மீனாட்சியம்மன் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டுவரப்பட்டு. அங்கு மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தகால் நடப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் வளாத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29 - சித்திரை திருவிழா கொடியேற்றம், மே 06 - மீனாட்சி பட்டாபிஷேகம், மே 08 - மீனாட்சி திருக்கல்யாணம், மே 09 - மீனாட்சி திருத்தேரோட்டம், மே 10 - கள்ளழகர் புறப்பாடு, மே 11 - கள்ளழகர் எதிர்சேவை, மே 12 - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், திருவிழாவுக்காக முகூர்த்தக்கால் நடப்பட்ட நிலையில் மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியது. .
இதேபோன்று கள்ளழகர் கோவிலை பொறுத்தமட்டில் மே 10 - கள்ளழகர் புறப்பாடு, மே 11 - கள்ளழகர் எதிர்சேவை, மே 12 - கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications