மதுரை சித்திரை திருவிழா.. மீனாட்சி திருக்கல்யாணம். கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவது எப்போது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 23ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மே 2ஆம் தேதி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 3ஆம் தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெற உள்ளது. மே 5ம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை காண இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே சிறப்பு வாய்ந்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சொக்கநாத பெருமானே பல்வேறு அவதாரங்கள் எடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதன புண்ணிய ஸ்தலம் ஆகும். நால்வரால் பாடல் பெற்றது. மூர்த்தி, தலம், விருட்சம் என்ற பெருமை பெற்றது. புதனுக்கு அதிபதியாக விளங்கும் தலம்.

அதே போல அழகர்கோவில் கள்ளழகர் ஆலயத்தில் சித்திரை திருவிழா, ஆடி பிரம்மோற்சவம்,மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகாலமாக சித்திரை திருவிழா கோவிலுக்கு உள்ளேயே நடைபெற்றது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைக்கு வந்தார் கள்ளழகர்.

ஏப்ரல் 23ல் கொடியேற்றம்

ஏப்ரல் 23ல் கொடியேற்றம்

இந்த ஆண்டு சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. மதுரை கள்ளழகர் கோவில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் கடந்த தை மாதம் 12ஆம் தேதி வியாழக்கிழமையன்று தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் காலை 8.15 மணி முதல் 9.00 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும், பிற்பகல் 3.15 மணிக்கு மேல் 4.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்ப திருவிழா, மாசி திருவிழாக்கள் முடிந்து பங்குனி மாதத்தில் நடக்கும் கோடை வசந்த உற்சவ திருவிழா நேற்றைய தினம் தொடங்கி உள்ளது. இந்த விழா ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி பங்குனி உத்திரம் அன்று காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி செல்லூர் வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளுகிறார்கள். அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்படும்.
அதன் பிறகு மாலையில் சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோவிலுக்கு செல்கிறார்கள்.

சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா நடைபெறும் போது கொடியேற்றம் தொடங்கி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை வரைக்கும் பல லட்சம் பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 1ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 2ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறும். மே 3ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

 கள்ளழகருக்கு எதிர்சேவை

கள்ளழகருக்கு எதிர்சேவை

கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தொடங்குகிறது. மே 4 ஆம் தேதி தல்லாகுளத்தில் கள்ளழகர் எதிசேவை நடைபெறும். வைகை ஆற்றில் இறங்குவதற்காக கண்டாங்கி புடவை கட்டி தங்க பல்லாக்கில் அதிர்வேட்டு முழங்க அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு வருவார் கள்ளழகர். தங்களை காண வரும் அழகரை பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து எதிர்கொண்டு அழைப்பார்கள். எதிர்சேவை முடிந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தங்குவார் கள்ளழகர்.

வைகையில் எழுந்தருளும் கள்ளழகர்

வைகையில் எழுந்தருளும் கள்ளழகர்

தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் விடிய விடிய திருமஞ்சனம் முடிந்து தங்க குதிரை வாகனத்தின் மீதேறி மே 5ஆம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவார். வானத்தில் முழு நிலவு பிரகாசிக்க தங்கக்குதிரையில் பவனி வரும் கள்ளழகரை காண விடிய விடிய காத்திருப்பார்கள் பக்தர்கள். மக்கள் வெள்ளத்தில் வரும் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள் பக்தர்கள்.

கொண்டாட தயாராகும் மதுரை

கொண்டாட தயாராகும் மதுரை

மதுரையின் மிகப்பெரிய திருவிழா சித்திரை திருவிழா. மீனாட்சி திருக்கல்யாணம், சித்திரை தேரோட்டம், கள்ளழகர் வைகையில் இறங்குவதை காண தென் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+