மதுரை சித்திரை திருவிழா..கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரர்..சிம்ம வாகனத்தில் வலம் வந்த அம்மன்
மதுரை:உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. சித்திரை திருவிழாவின் முதல்நாளில் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக வலம் வந்தார் மீனாட்சி அம்மன். கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடையுடன் வலம் வந்த சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். அந்த கோவிலில் நடைபெறும் விழாக்களுக்கு மக்கள் திரளாக பங்கேற்பது வழக்கமான ஒன்று. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரபலம்.

ஞாயிறன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன் பின்னர் 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி அம்மனை வணங்கினர்.
12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

23.04.2023-மாலை-கற்பக விருட்சம்,சிம்மவாகனம்
24.04.23-இரவு-பூதம்,அன்னவாகனம்
25.04.23-இரவு-கைலாசவாகனம்,காமதேனு வாகனம்
26.04.2023-காலை தங்கப்பல்லக்கு. வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி
27.04.23-இரவு-தங்கக்குதிரை வாகனம் வேடர்பறிலீலை
28.04.23-இரவு- ரிஷப வாகனம் - சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை.
29.04.23-இரவு-நந்திகேசுவரர்,யாளி வாகனம்
30.04.2023-இரவு 07.05-07.29-மணிக்குள் அன்னை மீனாட்சி பட்டாபிஷேகம்
01.05.23-இரவு திக்விஜயம்-இந்திரவிமானம்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2 ஆம்தேதியும் மே 3ஆம் தேதி தேரோட்டமும் நடக்க உள்ளது. மே 4ஆம் தேதி தீர்த்தவாரி தேவேந்திர பூஜையுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. ஞாயிறன்று காலையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் தமிழ்நாடு நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சித்திரை பெருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலின் உள்ளே அமைந்துள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி. பிறகு அங்கிருந்து புறப்பாடாகி நான்கு மாசி வீதிகளில் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும், கற்பகவிருட்சம் வாகனத்தில் சுந்தரேசுவரரும் பிரியாவிடையும் எழுந்தருளி விதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிம்ம வாகனத்தில் கம்பீரமாக மீனாட்சியும், கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரப் பெருமான் வீதி உலா வருவதை ஆயிரக்கணக்கான மக்கள் மாசி வீதிகளில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சிறுவர்கள் சிறுமிகள் மீனாட்சி அம்மன் போல வேடமணிந்தும், கோலாட்டம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரையாட்டம், உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய கலை வெளிப்படுத்தியவாறு மாசி வீதி விதி உலா வந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
கற்பக மரம் படைத்தல் தத்துவத்தை குறிப்பது. அள்ள அள்ள குறையாமல் கேட்டதை எல்லாம் கொடுப்பது கற்பக மரம். தனது பக்தர்கள் கேட்பதை எல்லாம் கொடுக்கத்தான் முதல் நாளில் சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் கற்பக விருட்ச வாகனத்தில் வலம் வந்தார். விரும்பியது எல்லாம் கிடைத்து விட்டால் மனதில் அகங்காரம் வந்து விடும். தற்பெருமையும் வந்து விடும் எனவே அந்த ஆணவம் கூடாது என்பதை உணர்த்தவே மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் வலம் வருகிறாள். எல்லாம் கிடைத்து விட்டது என்று தலைக்கனத்தில் ஆடாதே கவனமாக இரு என்பதை உணர்த்தவே சிங்க வாகனமேறி பவனி வருகிறாள் மீனாட்சி. சித்திரை திருவிழாவில் தினம் தினம் அம்மை அப்பனின் அலங்காரத்தை காண கண் கோடி வேண்டும். மதுரைக்கு வாருங்கள் மக்களே.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications