அழகர் கோவிலில் நாளை ஆடித்தேரோட்டம் பார்க்க ரெடியா?.. மதுரை, மேலூரில் இருந்து ஸ்பெஷல் பஸ்
மதுரை: கள்ளழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. பக்தர்களின் வசதிக்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் மேலூரில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 24ஆம் தேதி காலையில் மேளதாளம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தத்தால் விசேஷ அபிஷேகமும் நடைபெற்றது.
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. அப்போது கொடிக்கம்பம் அருகில் நின்ற சுந்தரவல்லி கோவில் யானை துதிக்கையை தூக்கி ஆசிர்வதித்தது. இதனையடுத்து இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. தினசரியும் அலங்கரிப்பட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார்.

நேற்றிரவு புஷ்ப சப்பரத்தில் அருள்பாலித்தார் கள்ளழகர். இன்று இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேரோட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நாளை செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது. நாளை காலையில் 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி, தேவியர்களுடன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுக்கின்றனர். நாளை இரவு பூப்பல்லக்கும், 2ஆம் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், ஆகஸ்ட் 3ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் அழகர் கோவில் ஆடித்திருவிழா நிறைவடைகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications