மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..7500 கிலோ அரிசி..6 டன் காய்கறிகளால் தயாரான விருந்து
மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கல்யாண விருந்து சாப்பிட்டு விட்டு மொய் எழுதி விட்டு சென்றனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஞாயிறன்று நடைபெற்றது. பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சிவபெருமானிடம் போர் புரியும் திக் விஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை மிதுன லக்னத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். இதைதொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.
கோவிலுக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பெரிய அளவிலான 20க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு இருந்தன. இன்று இரவு 7.30 மணிக்கு சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண வைபவத்தின் போது பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதி மேல் நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து 23 ஆண்டுகளுக்கு மேலாக அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட் சார்பில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோருக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மாப்பிள்ளை அழைப்பில் தொடங்கி, திருக்கல்யாண நடைபெற்ற இன்று காலை முதல் மாலை வரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 7 ஆயிரத்து 500 கிலோ அரிசி, 6 டன் காய்கறிகளுடன் உணவு தயாரிக்கப்படுகிறது.
சமையல் பணியில் 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். விருந்துக்கும் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பள்ளி மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சுய சேவை முறையில் விருந்து பரிமாறப்படுகிறது. கல்யாண விருந்து சாப்பிட்ட பலரும் மொய் எழுதினர். திருக்கல்யணத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாசி வீதிகளில் நாளைய தினம் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications