தங்க பல்லாக்கில் பாவக்காய் மண்டபம் வந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்..தாகம் தணித்த இஸ்லாமியர்கள்
மதுரை: சித்திரை திருவிழாவில் பக்தியுடன் மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. வில்லாபுரம் பாவற்காய் மண்டபத்திற்கு தங்க பல்லாக்கில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் வந்தார் மீனாட்சி அம்மன். சுவாமி அம்மனை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தனித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா சிறப்பானது. 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் சுவாமியும் அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் 4ம் நாள் நிகழ்வாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் தங்கியிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியவிடையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமியும் அம்மனும் தங்க பல்லாக்கில் வில்லாபுரத்திற்கு வந்து எழுந்தருளுவது ஏன் என்பதற்கு ஒரு காரணம் உண்டு.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழகப்ப பிள்ளை, தானப்ப பிள்ளை ஆகியோர் எத்தனையோ கைங்கர்யங்களை செய்துள்ளனர். இவர்கள் மீனாட்சி கோயிலுக்கு செய்த சேவைகளை கண்டு வியந்த பாண்டிய சேனாதிபதி, அவர்களது வேண்டுகோள் கேட்டார். தங்கள் ஊருக்கு அம்மையும் அப்பனும் ஒருநாள் வந்து தங்கி அருளவேண்டும் என அவர்கள் பதிலுரைத்தனர். அன்றுமுதல் இந்த நான்காம் நாள் மண்டகப்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வில்வமரங்கள் நிறைந்த ஊர் என்பதால் வில்வபுரம் என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போது வில்லாபுரம் என வழங்குகின்றனர்.
மக்கள் பாவங்களை காய்த்து போக்கச் செய்வதால் மண்டபத்துக்குப் பெயர் பாவக்காய் மண்டபம். பாவக்காய்கள் நிவேதனமாக இறைவனுக்கு மக்கள் அளித்து வந்ததால் இந்தப் பெயரானது என்றும் கூறுகின்றனர். மதுரை தெற்குவாசலை அடுத்த வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படிக்கு இறைவனும் இறைவியும் பல்லக்கில் காலையில் வந்து தங்குவது வழக்கமாயிற்று. மீண்டும் மாலை புறப்பட்டு இரவு கோயிலை அடைவர். அன்றைய தினம் மாசிவீதி சுற்றுவதில்லை. சின்னக்கடைத்தெரு வழியாகவே சென்று வருவர்.

நேற்றைய தினம் நான்காம் நாள் வில்லாபுரம் சுவாமி மண்டகப்படி முழுக்க சுற்றுவட்டார பக்தர்கள் வந்து கூடிநின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து சின்ன கடை வீதி, தெற்கு வாசல் வழியாக நடைபெற்ற வீதியுலா, இறுதியாக கோயிலை சென்றடைந்தது. வீதி உலாவின் போது பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காகவும் ஏராளமானோர் குடிநீர் பந்தல்களை அமைத்தும் அன்னதானமாக பிரசாதங்களை வழங்கியும் வருகின்றனர்
பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் மத நல்லிணக்கத்தோடு மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கப்பட்டது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்த சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கும் பக்தர்களுக்கும் செய்யும் தொண்டு அந்த மகேசனுக்கும் அன்னை மீனாட்சிக்கும் செய்யும் தொண்டு என்பதை அனைவரும் அறிவார்கள்தானே.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications