சித்திரை திருவிழா..மதுரை குலுங்க குலுங்க.. மீனாட்சி பட்டாபிஷேகம்.. திருக்கல்யாணமும் தேரோட்டமும்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சித்திரை திருவிழாவிற்கு தயாராகி வருகிறது மதுரை. 23ஆம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மீனாட்சி அம்மனின் அரசாங்கம் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகப்போகிறது. சுந்தரேஸ்வரரை கரம் பிடித்து..திருக்கல்யாணம் முடிந்த உடன் தம்பதி சமேதராக நான்கு மாசி வீதிகளில் தேரோட்டத்தில் வலம் வருவதை காண பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

மல்லிகைப்பூ மணக்கும் மதுரை நகரத்தில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. தூங்கா நகரத்தின் சிறப்பே மீனாட்சி அம்மன் கோவில்தான். கண்ணுக்குள் வைத்து மக்களை காத்து வருகிறார் அன்னை மீனாட்சி.

Madurai Sri Meenakshi Sundareswarar Temple Chithirai Festival 2023 Check the Full details

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் பல திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடம் மதுரை. இன்றைக்கும் ஆவணி மூல திருவிழாவில் பல்வேறு திருவிளையாடல்கள் அரங்கேற்றம் செய்யப்படும். இறைவனும் இறைவியும் அரசாளும் நகரம் மதுரை மாநகரம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகரம்.

சித்திரை முதல் ஆவணி வரை மதுரையில் அன்னை மீனாட்சி ஆட்சி நடைபெறும். ஆவணி முதல் பங்குனி வரை சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறும். வைர கிரீடம் அணிந்து கையில் செங்கோல் ஏந்தி அன்னை மீனாட்சி அரசாளும் அழகை காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இதோ சித்திரை பிறந்து விட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவும் தொடங்கப்போகிறது. மதுரை மக்கள் மட்டுமல்லாது அக்கம் பக்கத்து மாவட்ட மக்களும் திருவிழாவைக் காண மதுரைக்கு வருவார்கள். வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் தொடங்குகிறது.
எந்தெந்த நாட்களில் என்ன விஷேசம் வாகன ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

23.04.2023-காலை-10.35-10.59 கொடியேற்றம் - மாலை- கற்பக விருட்சம்,சிம்மவாகனம்

24.04.23-இரவு- பூதம், அன்னவாகனம்

25.04.23-இரவு- கைலாசவாகனம், காமதேனு வாகனம்

26.04.2023- காலை தங்கப்பல்லக்கு. வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி

27.04.23- இரவு-தங்கக்குதிரை_வாகனம்-வேடர்பறிலீலை

28.04.23-இரவு- ரிஷப வாகனம் - சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை.

29.04.23- இரவு- நந்திகேசுவரர், யாளி_வாகனம்

30.04.2023- இரவு- 07.05-07.29-மணிக்குள் - அன்னை-மீனாட்சி பட்டாபிஷேகம்

01.05.23-இரவு திக்விஜயம்-இந்திரவிமானம்

02.05.2023-காலை 08.35-08.59க்குள் திருக்கல்யாணம் -மாலை-யானைவாகனம், பூப்பல்லாக்கு

03.05.23- திருத்தேர் - மாலையில் சப்தாவர்ணம்.

04.05.2023-தீர்த்தவாரி, தேவேந்திர பூஜை - ரிஷபவாகனம்

இதோடு திருவிழா முடிந்து விடாது கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா களைகட்டும். கள்ளழகர் எதிர்சேவையும் வைகையில் இறங்கும் நிகழ்வும் காண பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் மதுரையில் கூடுவார்கள். கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1 திங்கள்கிழமை முதல் நாள் திருவிழாவுடன் ஆரம்பமாகிறது. அன்று மாலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தோளுக்கினியானில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி திருவாராதனம் நடைபெறும்.

மே 2ஆம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெறும். 3ம் நாள் மாலை 7 மணிக்குமேல் அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜ பெருமாள் மதுரைக்கு கண்டாங்கி புடவை கட்டி புறப்படுகிறார். மே 4 ஆம் தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். அன்றிரவு தல்லாகுளத்தில் சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்படுவார்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் மே 5 ஆம் தேதி காலை 5.45 முதல் 6.12 மணி வரை நடைபெறும் என கள்ளழகர் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வைகை ஆற்றங்கரை ஓரத்திலேயே குதிரை வாகனத்தில் வண்டியூருக்கு செல்வார் கள்ளழகர். மே 6ம் தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார்.

மே 6ம் தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். மே 6ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் விடிய விடிய இராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 7ம் தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

மே 7ம் தேதி பகல் 2 மணிக்கு கள்ளழகர் இராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லகில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். மே 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு இராமநாதபுரம் மன்னர் சேதபதி மண்டபத்தில் கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார். மே 9ம் தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர் கோயிலுக்கு வந்தடைகிறார்.

கொடியேற்றம் தொடங்கி தீர்த்தவாரி வரைக்கும் சாமி அம்மன் ஊர்வலத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதே போல எதிர்சேவை தொடங்கி பூப்பல்லாக்கில் கள்ளழகரை வழியனுப்பு வைப்பது வரைக்கும் மதுரை எங்கும் மல்லிகை வாசம் வீசும். என்ன பக்தர்களே.. திருவிழாவை பார்க்க மதுரைக்கு டிக்கெட் போடுங்க

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+