Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாளய அமாவாசை படையல்.. வாழைக்காய் அவசியம்.. வாழையடி வாழையாக குலம் தழைக்கும் வழிபாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாளய அமாவாசை நாளில் நாம் முன்னோர்களுக்கு திதி கொடுத்து படையலிட்டு வழிபடும் போது சில காய்களை அவசியம் சேர்க்க வேண்டும். சில காய்களை தவிர்க்க வேண்டும். எந்தெந்த காய்கறிகளை அவசியம் சமைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

எத்தனையோ விரதங்கள் கடைபிடித்தாலும் முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான நாளாக அமாவாசை நாளை குறிப்பிடுகிறோம். அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுத்து, அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்கிறோம்.

Mahalaya Amavasai Why vazhakkai is essential amavasai Padaiyal

அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய சந்ததிகளை காக்கும், வீட்டில் உள்ள சுப காரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. அமாவாசை நாளில் கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகளை அமாவாசை காய்கறிகள் என குறிப்பிடுகிறோம்.

அமாவாசை அன்று கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள், தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என தனி பட்டியலே உண்டு. இதில் அமாவாசை விரத சமையலிலும் சரி, அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போது அந்தணருக்கு கொடுக்கும் பொருட்களில் வாழைக்காய் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுவதாக சிலர் சொல்வார்கள். அதே போல் அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பலாக்காய் சமைப்பதும் கண்டிப்பாக சமைக்க வேண்டும் என சொல்லப்படுவதற்கு புராணத்தில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது

ஆதிகாலத்தில் விஸ்வாமித்ரர் புகழ் பெற்ற ராஜரிஷி. ராஜ வம்சத்தை சேர்ந்தவர். ஆனால் கடுமையான தவப்பயனால் பிரம்மரிஷியாக உயர்ந்தவர். அதுவும் "வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி" பட்டம் பெற்றவர். ஆனால் இப்படிப்பட்டம் பெறுவதற்கு முன் அவருக்கும் வஸிஷ்டருக்கும் எப்போதும் மோதல்தான்.

ஒருமுறை தன் முன்னோர் திவசத்திற்கு தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை அழைத்தார் வசிஷ்டர். அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும் என்றார் விஷ்வாமித்திரர். உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்? விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வசிஷ்டருக்குத்தெரியாதா என்ன ?. இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், "ஆஹா! 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார்.

திவசம் கொடுக்கும் நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.1008 காய்கறிகள் இல்லை.

உடனே விஸ்வாமித்திரர் கோபத்துடன் என்ன இது? 1008 வகை காய்கள் எங்கே? என்று வசிஷ்டரைப் பார்த்து கேட்டார். அவரோ நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அருந்ததியோ, "காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம் பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே" என்ற ஸ்லோகத்தை கூறிவிட்டு, இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே! என்றாள். அதைக்கேட்ட விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப்போனார்.

ஒரு திவசம் நாள் திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது. கூடவே வாழைக்காய்களை சேர்த்து 1008 காய்களை விஸ்வாமித்திரருக்கு படைத்து அவரின் மனதை திருப்தியடைய வைத்து விட்டாள் அருந்தது. மகாளய அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு படையல் இடும் போதும் போது மறக்காமல் வாழைக்காய், பாகற்காய், பிரண்டை, பலாப்பழம் சேர்த்து சமைத்து படையல் இடுவது சிறப்பு.

அமாவாசை தினத்தில் துவரம் பருப்பிற்கு பதிலாக பாசிப் பருப்பு சேர்த்து சமைக்க வேண்டும். கீரை, முள்ளங்கி, உருளை, பீன்ஸ், கத்திரிக்காய், முட்டைக்கோஸ், சுரைக்காய், முருங்கை, கோவக்காய் உள்ளிட்ட காய்கள் பயன்படுத்தக் கூடாது. அகத்திக் கீரை மட்டும் முன்னோர்களுக்கான படையலில் சேர்க்கலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உணவு சமைத்து படையலிட்டு நாம் சாப்பிடும் முன்பாக காகத்திற்கு படைக்க வேண்டும். மறக்காமல் சில ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+