மகா சிவராத்திரி..இன்று விடிய விடிய சிவ ஆலயங்களில் குளிர குளிர அபிஷேகம்..பக்திக்கொண்டாட்டம்
மகா சிவராத்திரியில் விரதம் இருந்து சிவாலயங்களுக்குச் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள், சிவ தரிசனம் செய்வார்கள்.
மதுரை: மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிவபெருமானுக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளிட்ட பல சிவ ஆலயங்களில் பக்தியுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் 8வது நாளான இன்று சனிக்கிழமை மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதுபோல் நாளை மறுநாள் 19ஆம் தேதி பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது. திருவிழாவின் 9வது நாளான 19 ஆம் அன்று காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இதே போல சென்னை மயிலாப்பூரில் உள்ள 7 சிவ ஆலயங்களிலும் பள்ளிக்கரணை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருக்கச்சூர் ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சுசீந்திரம் தாணுமலயான் சுவாமி கோவில் தமிழகத்தின் முக்கியமான ஆலயங்களில், இன்று இரவு விடிய விடிய சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட சிவ ஆலயங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னாடுடைய சிவனே போற்றி..எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பக்தி முழக்கங்கள் ஒலித்த வண்ணம் இருக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications