மகா சிவராத்திரி நாளில் கும்ப ராசியில் கூடும் கிரகங்கள்..யாருக்கு என்ன பலன்.. என்ன அபிஷேகம் செய்யலாம்
சென்னை: மகா சிவராத்திரி தினமான நாளைய தினம் சனி பகவானின் வீடான கும்ப ராசியில் சனி, சூரியன், சுக்கிரன், மற்றும் சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களின் கூட்டணி அமைந்துள்ளன. ராகுவும் புதனும் மீன ராசியில் இணைந்துள்ளன. இந்த கிரகங்களின் சேர்க்கையால் மகாசிவராத்திரி நாளில் சிவ பெருமானின் பேரருள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது யார் யார் என்ன பொருட்களால் சிவபெருமானை அபிஷேகம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
மேஷம்: லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூட்டணி அமைத்துள்ளது உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். சிவனின் பரிபூரண பேரருள் உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரம். உங்கள் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை தொழிலில் புரமோசன் கிடைக்கும். பணியிடத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுப செலவுகள் தேடி வரும். சிவபெருமானுக்கு பன்னீரும் தேனும் அபிஷேகத்திற்கு வாங்கித்தர அற்புத பலன்கள் தேடி வரும்.

ரிஷபம்: உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. லாப ஸ்தானத்தில் 2 கிரகங்கள் கூடியுள்ளன. புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம் லாபங்கள் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடும் போது சிவப்பு சந்தனம் அபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும். இதனால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்: பாக்ய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. சூரியன் சந்திரன் உள்ளிட்ட கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். உங்களின் தர்ம கர்ம ஸ்தானங்களில் கிரகங்கள் கூடியுள்ளன. உங்களின் வேலை தொழிலில் சிறப்பான நிலை ஏற்படும். மகாசிவராத்திரி நாளில் கரும்புச்சாறு மற்றும் பால் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது நல்லது. மகாசிவராத்திரி நாளில் சிவ பெருமானின் அருளால் நீங்கள் நினைத்தது நடக்கும்.
கடகம்: சந்திரனை ராசி அபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு முக்கிய கிரகங்கள் அஷ்டம ஸ்தானத்தில் கூடியுள்ளன. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுமையும் நிதானமும் அவசியம். பாக்ய ஸ்தானத்திலும் ராகு, புதன் இணைவதால் உங்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணமும் லாபமும் கிடைக்கும், பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பதவி உயர்வு இருக்கும். மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வில்வ அர்ச்சனை செய்வதற்கு மறக்காதீர்கள்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏழாவது வீட்டிலும் எட்டாவது வீட்டிலும் கிரகங்கள் இணைந்துள்ளன. வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். கிரகங்களின் பார்வை உங்கள் ராசி மீது படுகிறது. பதவி உயர்வு அல்லது நிதிப் பலன்களுக்கான வாய்ப்புகளும் இருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். ராசி அதிபதியின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. இன்றைய தினம் பழங்களால் அபிஷேகம் செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய நன்மைகள் நடைபெறும்.
கன்னி: உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் நான்கு கிரகங்கள் கூட்டணி இணைந்துள்ளதால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடு லாபகரமாக இருக்கும். மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானை சந்தன அபிஷேகம் செய்து வழிபடலாம். மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications