மகரவிளக்கு பூஜை.. திருவாபரணம் அணிந்து அரசனாக ஜொலித்த ஐயப்பன்.. பொன்னம்பலத்தில் மகர ஜோதி தரிசனம்
சபரிமலை: மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தங்க ஆபரணங்கள் அணிந்து அரசனாக ஜொலித்தார் ஐயப்பன். பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவத்தில் தரிசனம் செய்த ஐயப்பனை லட்சக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று மாலை நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்ரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இன்று 40000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலையில் மகர விளக்கு பூஜை நடைபெறும் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக பம்பைக்கு கொண்டு வரப்பட்டது.
மாலையில் பதினெட்டாம் படியை அடைந்த திருவாபரணங்களுக்கு தந்திரி மகேஷ் மோகனரு, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். திருவாபரணங்களை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. இன்றைய தினம் ஐயப்பன் தங்க ஆபரணங்கள் அணிந்து அரசன் போல காட்சி அளித்தார்.
திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்ட பிறகு தீபாராதனையில் அரசானாக காட்சி அளித்தார் ஐயப்பன். தீப ஒளியில் ஜொலித்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மகர மாத பிறப்பை முன்னிட்டு பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி வடிவத்தில் காட்சி அளித்தார் ஐயப்பன். மகரஜோதியை தரிசனம் செய்ய கேரளா மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்திருந்தனர்.
மகரஜோதியை கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்ய பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தின் திருமுற்றம், பாண்டித்தாவளம், கொப்பரைக்களம், மாளிகைபுரம், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபம் உள்ளிட்ட 10 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர். இன்றைய தினம் மகர விளக்கு, மகர ஜோதியை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் 20ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 21ஆம் தேதி பந்தள ராஜ குடும்பத்தினரின் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு மண்டல பூஜை வழிபாடு முடிந்து, கோயில் நடை அடைக்கப்படும். இதனையடுத்து மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications