Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்கள் கனவில் மரங்கள் அடிக்கடி வருதா? நீங்க அதிர்ஷ்டசாலிதான்.. நல்ல தகவல் தேடி வருமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நாம் காணும் கனவுகள் சில நேரங்களில் நல்லதையும் தீயதையும் உணர்த்தும். மரங்களும் செடி கொடிகளும் சிலரது கனவில் அடிக்கடி வரும். அந்த கனவுகளுக்கான அர்த்தம் என்ன என்று பலருக்கும் தெரியாது. ஒரு சிலர் மரங்கள் அடர்ந்த வனத்தில் மாட்டிக்கொண்டது போல கனவு காண்பார்கள். பொதுவாக மரங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்று கனவுகளும் பலன்களும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கனவில் துளசிச்செடி வந்தால் கடவுளின் ஆசீர்வாதம் குல தெய்வ ஆசி உங்களுக்கு கிடைக்கப்போகிறது என்று பொருள். உங்கள் கனவில் மருதாணி செடி வந்தால் உங்களிடம் உள்ள நோய் நொடிகள் விலகுவதை குறிக்கும். உங்கள் கனவில் மலர்செடிகள், பூந்தோட்டம் நிறைய இருப்பது போல் கண்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கப்போகிறது என்று பொருளாகும்.

Marangal kanavil vanthal enna palan Tamil: Tree dreams Good or Bad check the Palan

உங்களுடைய கனவில் அடிக்கடி தோட்டம் வந்தால் உங்களின் குடும்பம் விருத்தியடைய போகிறது என்பதனை குறிக்கும். தோட்டத்தில் பூக்கள், பழங்கள் கொத்து கொத்தாக இருப்பது போல கனவு வந்தால் குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் வரப்போகிறார்கள் என்று அர்த்தம்.

மாதுளை மரம் கனவில் வந்தால் உங்களின் செல்வம் அதிகரிக்கப்போகிறது என்று அர்த்தம். மரம் அல்லது செடி பசுமையாக இருப்பது போல் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம். செடி மற்றும் மரத்தில் இருக்கும் பூக்களை பறிப்பது போல உங்கள் கனவில் கண்டால், நல்ல அறிகுறியாகும்.

உங்கள் கனவில் புளிய மரத்தில் நிறைய புளிகள் காய்த்திருப்பது போல் கண்டால் பண வரவு அதிகரிக்கும். மேலும் புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு. உங்கள் கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்யும் தொழில் மேன்மை அடையும். மேலும் பொருள் வரவும், அயலாரின் இணக்கமும், பாசமும் உண்டாகும். கனவில் அத்தி மரம் வந்தால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற போவதை குறிக்கும்.

முக்கனி மரங்களை கனவில் காண்பது சிறப்பானது. உங்கள் கனவில் மாமரம் வந்தால் திருமணம் நடைபெறப்போவதை உணர்த்துகிறது. பலா மரம் காய்த்திருப்பதை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சனைகள் விலகும். வாழைமரம் குலைதள்ளி நிற்பதை கனவில் கண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதனை குறிக்கும். பிளம்ஸ் மரம் காய்த்து வளர்ந்திருப்பது போல கனவில் வந்தால் உங்களுக்கு தலைமைப்பதவி தேடி வரப்போகிறது என்று அர்த்தமாம்.

அரச மரத்தை கனவில் கண்டால் அரசாங்க வழியில் மேன்மையும் நல்ல செய்தியும் தேடி வரும். நெல்லி மரத்தை கனவில் கண்டால் பணக்கவலை உங்களை விட்டு விலகும் என்பதை குறிக்கும். தென்னை மரத்தை கனவில் கண்டால் நன்மைகள் கிடைக்க சிறிது தாமதம் ஆகும். பொறுமையோடு காத்திருந்தால் நல்லது நடக்கும் என்று உணர்த்துகிறது. ஓங்கி உயர்ந்த தேவதரு மரத்தை கண்டால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அர்த்தமாம்.

சப்பாத்திக்கள்ளி செடியை வெட்டி அகற்றுவதாக கண்டால் எதிரிகளின் தொல்லை விலகும். முள்கள் நிறைந்த செடியில் உங்களின் துணி மாட்டி கொண்டது போல கனவு வந்தால், உங்களின் பிரச்சினைகள் விலகப்போகிறது என்று அர்த்தம். செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால் உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்கும் நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

நீங்கள் மரத்தில் ஏறுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரப்போகிறது என்று அர்த்தம். மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டில் தனிமையில் நடந்து செல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு மிக பெரிய நல்ல விஷயம் நடக்க போகிறது என்று அர்த்தம். மலர்கள் கொத்தாக இருப்பது போல கனவு கண்டால் சொத்து சேர்க்கை ஏற்பட போகிறது என்பதை உணர்த்துகிறது. உங்கள் கனவில் பூச்செண்டு வந்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.

உங்கள் கனவில் ஈச்ச மரம் வந்தால் சொந்த பந்தங்களிடம் விரோத மனப்பான்மை ஏற்ப்பட வாய்ப்பு உண்டு. உங்கள் கனவில் பட்டுப்போன மரத்தை கண்டால்,வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிலோ ஏதோ விரும்பத்தகாத சோகம் நிகழப்போகிறது என்பதை உணர்த்துகிறது. வாடியிருந்த மரம் துளிர்ப்பது போல கனவில் வந்தால் இழந்த செல்வத்தை மீட்கப்போகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் அல்லது பிறரது தோப்பில் இலை, காய் மற்றும் கனிகளை பறிப்பது போல கனவில் வந்தால் வியாதிகள் வரும்.மரம் கீழே விழுவது போலவோ, மரத்தை வெட்டி சாய்ப்பது போலவோ கனவில் வந்தால் நீங்கள் தேவையற்ற வேலையை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+