மார்கழி அமாவாசை.. சதுரகிரியில் மலை ஏற குவிந்த பக்தர்கள்.. வனத்துறை தடையால் ஏமாற்றம்
விருதுநகர்: தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை ஜனவரி 12ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மார்கழி மாத அமாவாசைக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலையில் வீற்றிருக்கும் சுந்தன மகாலிங்கம் ஆலயத்திற்கு பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பெளர்ணமி தினங்களில் பக்தர்கள் குவிந்து மலையேறி சென்று தரிசனம் செய்வது வழக்கம். மழை வெள்ளம் நாட்களில் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளிப்பதில்லை.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதியன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மார்கழி மாத பிறப்பையொட்டி ஒரு நாள் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் மலையேறினர். இதனிடையே சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது.
திடீரென கொட்டிய கனமழையால், மலைப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டது. இதனால் மலைக்கோயிலில் உள்ள 200க்கும் மேற்பட்ட பக்தர்களை கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து அறிவுறுத்தினர். வனத்துறை அறிவிப்புக்கு முன்பாக கீழே இறங்க தொடங்கிய பக்தர்களின் பாதுகாப்புக்காக ஓடை பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பக்தர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், இன்று அமாவாசை தினத்திற்கு சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் ஆலயத்திற்கு பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்திற்கு பிறகு சதுரகிரியில் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரிக்கு மட்டும் தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், மாத சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி என 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது அந்த பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மார்கழி மாத அமாவாசைக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை ஜனவரி 12ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications