திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 5: தாழம்பூ ஏன் சிவபெருமானின் பூஜையில் இடம்பெறாது தெரியுமா?
திருப்பாவை - பாடல் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
பாடல் பொருள்: கண்ணன் என்றாலே மாயச் செயல்களுக்குரியவன்தானே! மதுராவில் பிறந்த மகனே! புனித நதியாம் யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனே! ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கை போன்றவனே! தேவகி தாயாரின் வயிற்றில் பிறந்து அவருக்கு பெருமை சேர்த்தவனே! உன் விஷமத்தனத்தை பொறுக்காத வளர்ப்பு தாய் யசோதா, உன் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை கொண்டவனே! நாங்கள் நீராடிவிட்டு மணம் வீசும் மலர்களுடன் புறப்படுகிறோம், உன் புகழ் பாடினாலே அத்தனை பாவங்களும் தீயில் நுழைந்த தூசு போல் எரிந்து கண்களுக்கு தெரியாமல் காணாமலேயே போய்விடும்.

விளக்கம்: உன்னை பெற்றதால் தாயானாவள் மற்றவர்களால் போற்றப்பட வேண்டும். அதுதான் ஒரு அன்னைக்கு ஒரு பிள்ளை செய்ய வேண்டிய கடமை ஆகும்.தேவகிக்கு கண்ணனை தன் வயிற்றில் சுமந்து பெற்றதால் பெருமை. அது போல் யசோதாவுக்கும் அவனை வளர்த்ததால் பெருமை. எனவே பிள்ளைகள் எப்போதும் நற்பெயரை பெற்றோருக்கு வாங்கித் தர வேண்டும்.
திருவெம்பாவை பாடல் - 5
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
பாடல் பொருள்: திருமாலும் 4 முகங்களை கொண்ட பிரம்மனும் இருவரில் யார் பெரியவர் என சண்டையிட்டுக் கொண்டனர். இருவரும் விட்டுக் கொடுக்காமல் தாங்களே பெரியவர்கள் என கூறிக் கொண்டனர். சிவபெருமானிடம் கேட்டால் அவர் கட்டாயம் நல்ல முடிவை சொல்வார் என நினைத்து அவரிடம் போய் இருவரும் எங்களில் யார் பெரியவர் என கேட்டனர். அப்போது அடிமுடியை கண்டுபிடிக்க முடியாதபடி ஜோதி வடிவில் ஈசன் இருந்தார். தனது அடியையும் முடியையும் கண்டுபிடித்து வருமாறு சொன்னார். அப்போது பிரம்ம தேவன், சிவபெருமானின் தலையை கண்டுபிடித்தார். மாயோனோ ஈசனின் திருவடியை தேடிச் சென்று அது கண்டுபிடிக்க முடியாமல் சோகத்துடன் திரும்பினார். தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
பிரம்மத் தேவன் மேலே மேலே சென்று திருவடியை தேடுகிறார். அப்போது ஈசனின் தலைமுடியில் இருந்து தாழம்பூ விழுந்துவிடுகிறது. இதை கண்ட பிரம்மன், இது ஈசனுடையது என்பதால் அடியை கண்டுவிட்டதாக ஈசனிடம் பொய் சொல்கிறார். இதற்கு தாழம்பூவும் ஒத்துழைக்கிறது. இதனால் கோபமடைந்த ஈசன், பிரம்மனுக்கு சாபமிடுகிறார்ய. தாழம்பூவுக்கு சேர்த்து சாபமிடும் ஈசன், இனி நீ என் பூஜையில் இடம் பெற மாட்டாய் என்றார். அப்படி அன்ன வேடமிட்டு சிவனின் அடிமுடியை காண சென்ற பிரம்மதேவனாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி அடிமுடியை காண முடியாத பெருமையை கொண்டவர் அண்ணாமலையார். அவரை நீ சாதாரணமாக பேசுகிறாய்.
வாசனைத் திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறக்கூடிய இனிப்பான உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! நம்மால் மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே ஈசனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் "சிவசிவ" என்று அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications