மார்கழி பாவை நோன்பு - திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 4
சென்னை: மக்களும் இந்த மண் உலகமும் செழிக்க மழை எப்படி பொழிய வேண்டும் என்று வருண தேவனிடம் விவரிக்கிறாள் ஆண்டாள் நாச்சியார். அந்த கண்ணனின் உருவத்தை போல கண்ணன் வைத்திருக்கும் பொருட்களை உவமையாக கூறி இந்த பாடலில் அழகாக சொல்கிறாள் ஆண்டாள்.
திருப்பாவை - பாடல் 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்: மக்களும் இந்த மண் உலகமும் செழிக்க மழை எப்படி பொழிய வேண்டும் என்று வருண தேவனிடம் விவரிக்கிறாள் ஆண்டாள் நாச்சியார். கண்ணனின் மீது மிகுந்த பக்தி கொண்ட கோபியர்களும், ஆண்டாளும் எல்லோரையும் கண்ணனாகவே நினைத்து பாடுகின்றனர். வருண தேவனை கூட கண்ணன் என்றுதான் அழைக்கின்றனர்.
கடலைப் போல கம்பீரமானவரே.. மக்களை காக்க கருணையுடன் மழை பொழிய வேண்டும் என்கிறாள். அதுவும் எப்படி மழை பொழிய வேண்டும் என்றும் உணர்த்துகிறாள் ஆண்டாள். அகண்ட சமுத்திரத்தில் உள்ள நீரினை எடுத்துக்கொண்டு மேலே உயர்ந்து கிருஷ்ணரின் உருவம் போல கருத்த மேகமாக மாற வேண்டும்.
மின்னல் இடியோடு மழை பொழிவதுதான் சிறப்பானது. அதுவும் கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் போல மின்னி, எதிரிகளை அச்சுறுத்தும் வலம்புரி சங்கு போல இடி இடித்து மழை பொழிய வேண்டும் என்கிறாள் ஆண்டாள். இடி மின்னலோடு மழை பெய்தால்தான் பூமி செழிக்கும்.
மழையானது இறைவனின் கையில் இருக்கும் சார்ங்கம் என் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளை போல விடாது அடை மழையாக பொழிய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாள் ஆண்டாள். மக்கள் பாதிக்காத அளவில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்ப வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாள் ஆண்டாள் நாச்சியார். மார்கழி மாதத்தில் அந்த கண்ணனை நினைத்து விரதம் இருக்கும் நாங்கள் மகிழ்ச்சியாக நீராடுவோம் என்று கூறுகிறாள் ஆண்டாள்.
திருவெம்பாவை - பாடல் 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்புகின்றனர் தோழியர்கள். ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்று எழுப்புகின்றனர். உறங்கும் பெண்ணே தனது தோழியர்களிடம், தெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்று கேட்கிறாள்.
எழுப்ப வந்த பெண்களோ, எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும். அதுவரையும் கண் உறங்கிக் காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதமானவனை, வேதங்களுக்கு மேலாக இறைவனை கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து, உள்ளம் உடைந்து நின்று உருகுகின்றோம். ஆதலால் நாங்கள் எண்ணிக் கூற இயலாதவர்களானோம். நீயே வந்து எண்ணிக்கொள்! எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு என்று சொல்கின்றனர்.
மாயையில் சிக்கிக் கொண்ட மனம், சோம்பலில் தொடர வேண்டி எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதனை அதன் போக்கில் விடாது, முயற்சி செய்து, இறைவனை நோக்கித் திருப்ப வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications