மாசி மகம் கோலாகலம்.. கும்பகோணத்தில் திருவிழா கோலம்.. மகாமகம் குளத்தில் புனித நீராடிய மக்கள்
கும்பகோணம்: மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகாமகம் குளத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். மாசி மகத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் நகரில் உள்ள சிவன், பெருமாள் கோவில்கள் மட்டுமின்றி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும். மாசிமகம் கும்பகோணத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மக திருவிழாவை முன்னிட்டு சிவன் கோவில்களில் 10 நாள் உற்சவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி, மகாமக குளத்தில் இன்று நடைபெறுகிறது.

மாசி மாதம் பௌர்ணமியும் மகம் திதியும் சேர்த்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மாதம் சிவபெருமானுக்கு மட்டுமின்றி பெருமாளுக்கும் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. வைஷ்ணவர்கள் மாசி மாதம் முழுக்க அதிகாலையில் எழுந்து குளித்து, துளசியால் பெருமாளை வழிபட்டு வந்தால் அவர்களுக்கு வைகுண்ட லோகத்தை அடையும் வரம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உதைத்து விட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்து போன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம் தான் கும்பகோணம். சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம். அமிர்த துளிகள் லிங்கமானது. அவர் தான் கும்பேஸ்வரர்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவேரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படி தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன் நதிகளே! மகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள். பன்னிரெண்டு நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம்.
கும்பகோணத்தில் 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும். ஆண்டுதோறும் மாசி மக விழாவும் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு மாசி மக விழா 6 சிவன் கோயில்களில் கடந்த வாரம் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி, மகாமக குளத்தில் இன்று நடைபெறுவதையொட்டி ஏராளமானோர் கும்பகோணம் நகரத்தில் குவிந்துள்ளனர். இவ்விழாவில் தொடர்புடைய 12 சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு மகாமக குளத்தைச் சுற்றி வலம் வந்து கரையில் நிறுத்தப்படுவர். தொடர்ந்து குளத்தில் அஸ்திர தேவருக்கு அபிஷேகமும் தீர்த்தவாரியும் நடைபெறும். இதனையடுத்து பக்தர்கள் புனித நீராடுவார்கள்.
மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் நகரில் உள்ள சிவன், பெருமாள் கோவில்கள் மட்டுமின்றி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் நடைபெற்று வரும் பல்வேறு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தீர்த்தவாரியில் பங்கேற்று புனித நீராடவும் ஏராளமானோர் கும்பகோணத்தில் குவிந்து வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications