மாசி சங்கடஹர சதுர்த்தி..தோஷங்களை நீக்கி சந்தோஷங்களை அதிகரிக்கும் விநாயகர் வழிபாடு
சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.
சென்னை: மாசி சங்கடஹர சதுர்த்தி கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கரஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்தால், சனியினால் ஏற்பட்ட சங்கடங்கள் குறைந்து மன நிம்மதி அதிகரிக்கும்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தியாகும்.

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். இன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மகா கணபதியை மனதில் நினைத்து வணங்கி பூஜை முடித்த பின் விநாயகர் கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.
மாசியில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வழிபட எல்லா தோசங்களும் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும். சங்கடஹர விரதத்தினை தொடங்குபவர்கள் மாசி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ, ஆவணி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ ஆரம்பித்து கடைப்பிடித்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறலாம். இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியினால் ஏற்பட்ட சங்கடங்கள் குறையும்.
சங்கடஹர சதுர்த்தி தினத்தில்தான், சந்திரனும் செவ்வாயும் விநாயகரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைந்தனர். எனவே, ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.
இம்மாதத்தில் சக்தி சிவத்தோடு ஐக்கியமாவதால் இம்மாதத்தில் திருமணம் நடத்தப் பெற்ற தம்பதியர்கள் நீண்ட ஆயுளோடு நிறைந்த திருமண வாழ்வினைப் பெறுவர். இதனை மாசிக்கயிறு பாசி படியும் என்ற பழமொழி மூலம் உணரலாம். திருமணமானப் பெண்கள் இம்மாதத்தில் தாலிக் கயிற்றினை மாற்றிக் கொள்கின்றனர். இன்றைய தினம் மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் மஞ்சள் கயிறு மாற்றினால் சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications