திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு போனால்! பன்னீர் இலை விபூதியை வாங்கிட்டு வாங்க!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தின் மகிமை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பன்னீர் இலை விபூதியானது தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் குணம் கொண்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

இங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. மாசி திருவிழா, ஆவணி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா ஆகியவை பிரசித்தி பெற்ற நிகழ்வுகளாகும். கோவிலில் பக்தர்கள் இலவசமாக சுவாமி தரிசனம் செய்ய இலவச தரிசனத்திற்கான தனி வரிசை உண்டு. அது போல் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்கள் ரூ 20, ரூ 100, ரூ 250 ஆகிய கட்டண தரிசன வரிசைகளும் தனித்தனியாக உள்ளன.
ரூ 100, ரூ 250 தரிசன வரிசையில் செல்வோர் கோயில் மகா மண்டபத்தில் இருந்து ஒன்றாக சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து ரூ 250 கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு லட்டு மற்றும் பன்னீர் இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
சூரபத்மனுடன் போரில் வென்று மயிலாகவும் சேவலாகவும் தன்னுடன் வைத்துக் கொண்டவர் முருகன். திருச்செந்தூர் ஜெயந்திபுரம் என்றழைக்கப்படுகிறது. இந்த புண்ணிய தலத்தில் தினமும் பக்தர்களுக்கு பன்னீர் இலை விபூதி பிரசாதம் கொடுக்கப்படுகிறது. இந்த விபூதியின் மகத்துவத்தை காண்போம்.
அதாவது பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனுடைய பன்னிரு கரங்களை நினைவுப்படுத்துவதாகும். 350 ஆண்டுகளுக்கு முன்பு திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக்குறை ஏற்படவே கோபுரத்திற்காக பணி செய்த ஆட்களுக்கு கூலிக்கு பதிலாக விபூதி இலையை கொடுத்தார்.
பிறகு இந்த பொட்டலத்தை தூண்டுகை விநாயகர் கோயிலை தாண்டியதும் பிரித்து பார்க்குமாறு கூறினாராம். அதே போல் அவர்களும் அந்த பொட்டலத்தை திறந்து பார்த்த போது அனைத்தும் தங்கமாக மாறியிருந்ததாம். இதனால் கூலியாட்கள் மகிழ்ந்தனர்.
அது போல் சூரபத்மனை வதம் செய்து முடிந்த பின்னர் காயங்கள் ஆற வேண்டும் என்பதற்காக முருகன் தன் பரிவாரங்களுக்கு 12 கைகளால் விபூதி பிரசாதம் வழங்கினார். அதன் மூலம் விஸ்வாமித்திரரின் காசநோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது என விளக்குகிறது.
வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல் புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மன பயம் உள்ளிட்ட நோய்களை பன்னீர் இலை விபூதி தீர்க்கும். இந்த பன்னீர் இலை விபூதி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதை மறக்காமல் வாங்கிச் சென்று தீராத நோய்களையும் தீர்க்க பயன்படுத்துங்கள்.












Click it and Unblock the Notifications