ஓம் நமச்சிவாய! சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா தேரோட்டம் இன்று!
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று பங்குனி பெருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். பிரசித்தி பெற்று விளங்கும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போது கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கோர் வருவர். அந்த வகையில் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி பெருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த கொடியேற்றத்தின் போது கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமாள் அருள்பாலித்தனர். இந்த நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நாளை 63 நாயன்மார்களோடு வீதி உலா வருதல், மார்ச் 25 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கும்.
மார்ச் 26ஆம் தேதி உமா மகேஷ்வர் தரிசனமும் மார்ச் 27ஆம் தேதி திருமுழுக்குடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவின் 10 நாட்களுக்கு பகல், இரவில் வீதி உலா நடைபெறுகிறது. தேரோட்ட தினமான இன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications