Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகார பதவி..வேலையில் புரமோசன்..திருமண யோகம் தரும் மயிலாப்பூர் அதிகார நந்தி..பக்தர்கள் பரவசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகார பதவியும் வேலையில் உயர் பதவியும் வேண்டுபவர்கள் சிவ ஆலயங்களில் நந்திபகவானிடம் வேண்டிக்கொண்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அதிகார நந்தி காட்சி கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கபாலீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்னும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது கபாலீஸ்வரர் ஆலயம். அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது இங்குதான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான்.

வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான். இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு 10 மணி அளவில் அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சி நடைபெற்றது. புன்னை மரம், கற்பக விருட்சம், வேங்கை மர வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

அதிகார நந்தி

அதிகார நந்தி

இன்றைய தினம் மூன்றாம் நாளன்று அதிகார நந்தியில் ஏறி வலம் வந்த கபாலீஸ்வரரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விநாயகர், சிங்கார வேலர், கற்பகாம்பாள் ஆகியோர் தனி தனி வாகனங்களில் உலா வந்தனர். அதிகாரம் பதவி மட்டுமின்றி திருமண யோகத்திற்கும் நந்தியம்பெருமான் முக்கியத்துவம் பெறுகிறார். நான்கு மாட வீதிகளில் அதிகார நந்தியில் வலம் வந்த கபாலீஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

அதிகார பதவி கிடைக்கும்

அதிகார பதவி கிடைக்கும்

திருமயிலை அதிகார நந்தி 100 வருட சிறப்பு வாய்ந்த நந்தி. வேலையில் பிரச்சனை என்றாலும் தகுதிகேற்ப அதிகாரம் இல்லை என்றாலும் உயர்பதவி முன்னேற்றம் கிடைக்கா விட்டாலும் திருமயிலை கபாலீஸ்வரர் அதிகார நந்தியை தரிசித்து பிரார்தனை செய்துக்கொள்ளலாம். அடுத்த ஆண்டு அதிகார நந்தியை பார்க்கும் முன் உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடும்.

 உயர்பதவி கிடைக்கும்

உயர்பதவி கிடைக்கும்

இன்னும் சொல்லபோனால் செவ்வாய் தோஷம் நிவர்த்திக்கு நந்தி வழிபாடே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்தில் நந்தி வழிபாடு செய்வது செவ்வாயின் காரகங்களான திருமணயோகம், கடன் நிவருத்தி, ஆற்றல், வெற்றி, உயர்பதவி கிடைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

மயிலாப்பூர் தேரோட்டம்

மயிலாப்பூர் தேரோட்டம்

ஏப்ரல் 3ஆம் தேதியன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு கபாலீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எட்டாம் நாள் விழாவாக நடைபெறும் அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது. அன்று நடைபெறும் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி விழாவும் மிகவும் புகழ்பெற்றது.

சிவபக்தரின் மகள் பூம்பாவை

சிவபக்தரின் மகள் பூம்பாவை

சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார்.

 பூம்பாவை உயிர்த்தெழுதல்

பூம்பாவை உயிர்த்தெழுதல்

விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததன் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறி, சிவநேசரின் கோரிக்கையை சம்பந்தர் நிராகரித்துவிடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டுசெய்து, பின் முக்தி அடைந்தாள். இக்கோவில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8ஆம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவமூர்த்திகள், கபாலி தீர்த்தத்துக்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் அஸ்திக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாகச் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 அறுபத்து மூவர்

அறுபத்து மூவர்

இந்த ஆண்டு அறுபத்து மூவர் விழா ஏப்ரல் 4ஆம் தேதியன்று மாலை நடைபெற உள்ளது. வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு ஐந்திரு மேனிகள் விழாவும் நடைபெறுகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 7ஆம் தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் பறி உற்சவமும் நடைபெற்று, 8ஆம் தேதி திருமுழுக்குடன் விழாவானது நிறைவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+