Thiruvannamalai Girivalam: இன்று பவுர்ணமி! திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அத்துடன் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதிலும் சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட நாட்களில் அதிகம் பேர் கிரிவலம் வருவதுண்டு.

அந்த வகையில் இன்று பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று காலை 9.25 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (ரயில் எண் 06130) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மொத்தம் 8 பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
வைகாசி விசாகம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் நேற்றே கிரிவலம் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தையும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 10-ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) மதியம் 12.32 மணிக்கு தொடங்கி மறுநாள் 11-ஆம் தேதி(புதன்கிழமை) மதியம் 1.58 மணிக்கு நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications