Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவராத்திரி பண்டிகை கோலாகலம்.. கொலுவிருக்கும் அம்மன்.. தானம் கொடுத்தால் தடைகள் நீங்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மைசூருவில் தசரா என்றும் மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்றும் கொண்டாடப்படும் பண்டிகை தமிழகத்தில் வீடுகளிலும் கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாங்கள் தொடங்கியுள்ளன. இந்த நாளில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு நாம் தானம் கொடுத்தால் சுப காரியத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி: புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முடிந்து மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்கள் கொண்டாடப்படும் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த பத்து நாட்களும் கோவில்களில் மட்டுமல்ல வீடுகளிலும் பண்டிகைக்கோலம்தான்.
வீடுகளை அலங்கரித்து கொலு வைத்து அம்மனை கொண்டாடுவார்கள். முப்பெரும் தேவியர்களான கலைமகள், மலைமகள், அலைமகளின் அருட்கடாட்சம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்திருக்கும்.

Navratri festival begins from today all over the country: Obstacles will be removed if you donate

தானம் கொடுங்கள்: நவராத்திரி கொண்டாடப்படும் நாட்களில் தினமும் பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்குவார்கள். எந்தப் பொருட்களைத் தானமாக வழங்குகிறார்களோ, அந்தப் பொருட்களுக்கு எந்தக் காலத்திலும் எப்போதும் எவரிடமும் கையேந்தத் தேவையில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எந்தந்த நாளில் என்ன மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கலாம் என்றும் தாத்பரியம் தெரிவிக்கிறது.

பிரதமை: முதல் நாள் பிரதமை திதியில் பூஜை துவங்கும் போது, வீட்டுக்கும் பூஜைக்கும் வரும் பெண்களுக்கு கூந்தலை அலங்கரிக்கத் தேவையான எண்ணெய், மலர்கள், ஹேர் பின், ரிப்பன் முதலான பொருட்கள் மற்றும் புத்தாடையுமாக வழங்க வேண்டும்.

துவிதியை: இரண்டாம் நாளில் குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை ஆடையுடன் சேர்த்துத் தருவது நல்லது. இதனால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.

திருதியை: மூன்றாம் நாளில், கண்ணாடி, மஞ்சள், கண் மை ஆகியவற்றை உடையுடன் சேர்த்து தானமாக வழங்கவேண்டும். இவற்றை வழங்குவதால், காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும்.

சதுர்த்தி: நான்காம் நாளில், தம்பதியாக வரச் செய்து பொன்னிற ஆடையும் மஞ்சள், சந்தனமும் தானமாக வழங்குவது வழக்கம். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஒற்றுமை பலப்படும்.

பஞ்சமி: ஐந்தாம் நாள் பஞ்சமியில், ஐந்து மங்கலப் பொருட்களையும் ஆடையையும் தானமாக வழங்கலாம். தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நடைபெறும்.

சஷ்டி: ஆறாம் நாள் சஷ்டி திதியில், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, புடவை, ஜாக்கெட் பிட் ஆகியவற்றுடன் தட்சணையாகவும் வைத்துக் கொடுக்கலாம். விரும்பியபடி நல்ல கணவரை அடையலாம்.

சப்தமி: ஏழாம் நாள் சப்தமி திதியில், பெண்களுக்கு புத்தாடையுடன் ஏழு மங்கலப் பொருட்களை ஆடையுடன் சேர்த்துக் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

அஷ்டமி: எட்டாம் நாள் அஷ்டமி துர்க்காஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எட்டு விதமானப் பொருட்களை புத்தாடையுடன் வழங்குவது சிறப்பு. அந்தக் காலத்தில் யானைக்கு தேங்காய் பழங்கள் கொடுத்து, நமஸ்கரிப்பார்களாம்.

நவமி: 9ஆம் நாள் நவமி ரொம்ப விசேஷம். தேவ குதிரை பிறந்தநாள் என்கிறது புராணம். ஆதிகாலத்தில், வெள்ளைக் குதிரைக்கு கொள்ளு கொடுப்பார்கள். மாணவர்களுக்கு புத்தகங்கள், பேனா, புத்தாடைகள் வழங்கலாம். சந்ததி சிறக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

தசமி: 10 ஆம் தசமி நாளில், தேவாரம், திருவாசகம் முதலான பக்தி நூல்களை ஆடையுடன் சேர்த்து வழங்க நம்முடைய வாரிசுகளில் கல்வி வளம் பெருகும். எனவே நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் இந்த நாட்களில் மறக்காமல் தானம் கொடுங்கள் நல்லது நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+