ஓணம் சத்யா.. தலைவாழை இலை போட்டு பச்சடி, கிச்சடி.. அவியல்.. பாயாசம் வகை வகையாக படையல்
சென்னை: ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் களைகட்டியுள்ளது. கொண்டாட்டங்களுக்கு இடையே ஓணம் சத்யா எனப்படும் விருந்தில் வைக்கப்படும் உணவுகளை பார்த்தாலே நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பும்.
ஓணம் என்றாலே வீடு முழுக்க அலங்காரமும், அழகாய் ஆடை அணிந்து வலம் வரும் இளசுகளும் குழந்தைகளும் தான் நினைவுக்கு வருவார்கள். அதை விட முக்கியமாக 'ஓணம் சத்ய' எனப்படும் திருவோண திருநாள் விருந்துதான். ஓணம் பண்டிகைக்கு வகை வகையாக சமைத்து தலைவாழை இலை போட்டு ருசியாக சாப்பிடுவதோடு உறவினர்களுக்கும் விருந்து வைப்பார்கள்.

ஓணம் என்பது மலையாள மொழி பேசும் மக்களின் அறுவடைத்திருநாள். அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி, சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பாதாள லோகத்தில் இருந்து தங்களை காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
வீடுகள் தோறும் அலங்கரித்து அத்தப்பூ கோலமிட்டு புத்தாடைகள் அணிந்து இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். பலவித விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர். பெண்கள் வீடுகளில் விளக்கேற்றியும் நடனமாடியும் ஊஞ்சல்கள் ஆடியும் மகிழ்ச்சியுடன் திருவோணம் திருநாளை கொண்டாடுகின்றனர். புலிகளை போல வேடமிட்டும் பலரும் ஊர்வலம் வருவார்கள். ஆறுகளில் படகுப்போட்டியும் நடத்தப்படும்.
அறுவடை திருநாளில் பத்தாவது தினத்தில் திருவோணம் தினத்தில் படையலிடப்படும் விருந்துக்கு ஓணம் சத்யா என்று பெயர். தலைவாழை இலையில் சுமார் 26 பொருட்களுடன் பரிமாறப்படும் சைவ விருந்து உணவு. அரிசி, பருப்பு, காய்கறிகள், இனிப்புகள், பாயாசம், பப்படம் என பலவகை உணவுகள் இந்த விருந்தில் பரிமாறப்படும்.
சுவையான விருந்து: புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், பால் பாயசம், சிவப்பு அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, நேந்திரம் சிப்ஸ், ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படுவது சிறப்பு. பலவகை உணவுகள் சமைத்து சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மக்களின் பாரம்பரியம்: ஓணம் பண்டிகை கேரள மக்களின் பாரம்பரிய அறுவடைத்திருவிழா. இந்த நாளில் பல வீடுகளில் விருந்துகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில், குருவாயூரப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் வரும் பக்தர்களுக்கு ஓணம் சத்யா விருந்து பரிமாறப்படுகிறது. பல பிரபல ஹோட்டல்களிலும் ஓணம் சத்யா விருந்துகள் களைகட்டியுள்ளன. மலையான மக்களின் ஓணம் சத்யா விருந்தினை சுவைக்க விரும்புபவர்கள் இன்றைய தினம் ஹோட்டல்களில் சுவைத்து மகிழலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications