ஓணம் திருநாள்.. ஓங்கி உலகளந்த உத்தமன்.. மூன்றடியில் அளந்த வாமனன்.. மகிழ்ந்த மகாபலி
சென்னை: ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நாளில் ஓங்கி உலகளந்த உத்தமன் வாமன அவதாரம் பற்றியும் மகாபலி சக்கரவர்த்தியின் புகழைப்பற்றியும் அறிந்து கொள்வோம். மகாபலி சக்கரவர்த்தியை ரட்சிக்க அவரின் புகழை உலகறியச்செய்ய வாமனனாக அவதரித்தார் மகாவிஷ்ணு.
திருவோண திருநாள்: கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் திருவோணம் தினத்தில் தங்களை காண வரும் மகாபலி மன்னனை வரவேற்க வண்ண வண்ண பூக்கோலங்களினால் அலங்கரித்துள்ளனர். ஊஞ்சல் ஆடியும் நடனமாடியும் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

வாமன அவதாரம்: ஆவணி திருவோணம் வாமன ஜெயந்தியாக இன்று வைணவர்களால் கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் தசாவாதாரங்களில் வாமன அவதாரம் ஐந்தாவது அவதாரமாகும். இந்த அவதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது. வாமனன் என்றால் குள்ளமானவர் என்றும் அழகானவர் என்றும் பொருள். குள்ளமானவராகத் தோன்றினாலும் உலகையே அளந்து விஸ்வரூபம் எடுத்துச் சிறப்பித்த அவதாரம், வாமன அவதாரம். வாமன அவதாரத்தில் அந்தணச்சிறுவனாக ஒரு கையில் தாழம்பூ குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தைப் பிடித்தும் அருளுகிறார் பகாவான் விஷ்ணு. மகாபலி சக்கரவர்த்தியை ரட்சிக்க அவரின் புகழை உலகறியச்செய்ய வாமனனாக அவதரித்தார் மகாவிஷ்ணு.
மகாபலி சக்கரவர்த்தி: மூவுலகையும் ஆளுவதற்காக யாகம் செய்தார் பிரகலாதனனின் பேரன் மகாபலி. மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மகாபலியின் புகழ் பலதிசை எங்கும் பரவியது. தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் கேட்டதை வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் வழிநடத்தி வந்தார்.
வாமன அவதாரம்: 100 அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். அதற்கு மகாவிஷ்ணு, "மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது. அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப்படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும் என்று கூறினார். மகாவிஷ்ணுவின் பதிலைக் கேட்ட தேவர்களின் தாயான அதிதி, காஷ்யப முனிவரிடம் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற என்ன வழி?' என்று கேட்டாள். அப்போது காஷ்யபர் பூஜைகளில் உயர்ந்ததான பயோ விரதத்தை உபதேசித்தார். அதிதியும் அந்த விரதத்தை சிரத்தையாக மேற்கொண்டாள். அவளின் பூஜைக்கு மகிழ்ந்த விஷ்ணு சிறு பாலகனாகத் தோன்றி அவளுக்கும் காஷ்யபருக்கும் காட்சி அளித்தார். அவ்வாறு அவர் காட்சி கொடுத்த தினம் ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதி.
உலகளந்த பெருமாள்: மகாவிஷ்ணு முதன்முதலில் முழுமனித வடிவில் தோன்றிய அவதாரமும் வாமன அவதாரமே. அழகான அந்த பாலகனுக்கு கதிரவனே காயத்ரி மந்திரம் உபதேசித்தார். பிரம்மனே முப்புரிநூல் அணிவித்தார். கலைமகள் தன் கை ருத்ராட்ச மாலையை வழங்க சந்திரன் தண்டமும் பூமிதேவி மான் தோலும் கொடுத்தார் என்கிறது புராணம். வாமனர் பிரம்மச்சாரியின் கோலம் கொண்டு மகாபலியின் யாகசாலைக்குச் சென்றார். வாமனரைக் கண்டு அவையில் இருந்தவர்கள் சிரித்தனர். ஆனால் மகாபலியோ வணங்கி.. உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு வாமனன், மூன்றடி நிலத்தினை தானமாக தர வேண்டும் என்று கேட்டான். சுக்கிராச்சார்யாருக்கு சந்தேகம் ஏற்படவே, அவர் தன் தவவலிமையால் வந்திருப்பது மகாவிஷ்ணுவே என்பதை அறிந்துகொண்டார். மகாபலியிடம் சென்று, 'வந்திருப்பது மகாவிஷ்ணு என்று சொல்லி அவர் கேட்கும் வரத்தைத் தர வேண்டாம் என்று கூறி தடுத்தார்.
சுக்ராசாரியரின் சொல்லைக் கேட்டாமல் மூன்றடி தானம் தர மகாபலி சம்மதித்தான். இதனால் சுக்கிராச்சார்யாரின் மனம் வருத்தம் அடைந்தது. அப்போது வாமனன், திரிவிக்ரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை மகாபலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதளலோகத்திற்கு அரசனாக்கினார். மகாபலியின் புகழுடன் பல யுகங்களுக்கும் நிலைத்திருக்குமாறு செய்து விட்டார் வாமனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications