முருகன் திருக்கல்யாணத்தில்! கலசத்தில் வைத்த திருமாங்கல்ய தேங்காய்! ரூ 3 லட்சத்திற்கு ஏலம்
தேனி: தேனி மாவட்டம் போடியில் பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவில் கலசத்தில் வைக்கப்பட்டிருந்த தேங்காய் ரூ 3.03 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆண்டுதோறும் கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் போகும்.
போடியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் மிகவும் பழமைவாய்ந்தது.350 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து பிடி மண் எடுத்து வரப்பட்டு போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இங்கு ஆடிக் கிருத்திகை, கார்த்திகை தீபம், கந்த சஷ்டி விழா உள்ளிட்ட விசேஷங்கள் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது.
இந்த விழாவில் கடந்த 7ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றது. சூரசம்ஹாரத்திற்கு பிறகு முருகனுக்கு தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்றைய தினம் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
இந்த திருக்கல்யாணம் அனைத்து முருகன் கோயில்களிலும் நடந்த நிலையில் போடி கோயிலிலும் நடந்தது. இந்த திருக்கல்யாணத்திற்காக கலசம் வைக்கப்பட்டது. அதில் இருந்த தேங்காய் மீது முருகன் தெய்வானை திருக்கல்யாணத்திற்கான திருமாங்கல்யம் வைக்கப்பட்டிருந்தது.
இந்த தேங்காய் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ 6001 என தொடங்கியது. அப்படியே படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்தை தாண்டியது. மேலும் பக்தர்கள் பணத்தை அதிகரித்த வண்ணம் இருந்தனர். இதனால் கடைசியாக ரூ 3.03 லட்சத்தை அடைந்தது. அதை போடி ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் தம்பதி ரூ 3.03 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர்.
கடந்த ஆண்டு நடந்த கந்த சஷ்டி விழாவின் போதும் கூட முருகன் திருக்கல்யாணத்தின் போது ஒரே ஒரு தேங்காய் ரூ 65 ஆயிரத்திற்கு ஏலம் போனது. தற்போது 3 லட்சத்திற்கு போனதுதான் அதிகபட்ச விலையாகும். இந்த ஏலத்தொகையை கேட்ட பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு முருகனை வழிபட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications