கந்த சஷ்டி.. முருக பக்தர்களே.. சென்னையை சுற்றியுள்ள முருகன் ஆலயங்களை தரிசிக்க ரெடியா? புக் பண்ணுங்க
சென்னை: முருகன் கோவிலை தரிசனம் செய்ய விரும்பும் முருக பக்தர்களுக்காக ஒருநாள் ஆன்மீக சுற்றுலாவை அறிமுகம் செய்கிறது தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம். ஒரே நாளில் 5 பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைத்து சுற்றுலா தொழில்களை மேம்படுத்த சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆடி மாதம் அம்மன் கோவில் சுற்றுலா, புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில் சுற்றுலா, நவராத்திரி சமயத்தில் அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாவிற்கு இந்து சமய அறநிலையத்துறையும் தமிழ்நாடு சுற்றுலா துறையும் ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த ஆண்டும் கந்த சஷ்டி விழா இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் முருகன் கோவில்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை முருகன் கோவில்களில் ஒருநாள் சுற்றுலா பயணத்திட்டம் 1ன் படி சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பஸ் கந்த கோட்டம் முருகன் கோவில், தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோவில், சிறுவாபுரி பாலமுருகன் கோவில், வடபழனி தண்டாயுதபாணி கோவில், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
சென்னை முருகன் கோவில்களில் ஒருநாள் சுற்றுலா பயணத்திட்டம் 2ன் படி சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பஸ் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோவில், குன்றத்தூர் சுப்பிரமணியசாமி கோவில், திருப்போரூர் கந்தசாமி கோவில், திருவான்மியூர் அறுபடை வீடு, மருந்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முருகன் கோவில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. முருகன் கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலை பேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications