Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனியில் பங்குனி உத்திரம்..தீர்த்தக்காவடியுடன் திரண்ட பக்தர்கள்..டன் கணக்கில் குவிந்த வாழைப்பழங்கள்

Subscribe to Oneindia Tamil

பழனி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடியுடன் குவிந்துள்ளனர். தேரோட்டம் நடைபெறுவதைக்கான பக்தர்கள் கூட்டம் பழனியில் அலைமோதி வருகிறது.பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக 500 டன் மலைவாழைப்பழங்களும் மலை அடிவாரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

பார் புகழும் பழனியிலே பங்குனி தேரோட்டம் என்று சொல்வார்கள். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது திரு ஆவினன் குடி என்று போற்றப்படும் பழனி.

இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் தைப்பூசம் திருவிழாவும் பங்குனி உத்திரம் திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்தும் காவடிகள் சுமந்து வந்தும் முருகப்பெருமானை வழிபடுவார்கள்.

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி பல்வேறு சிறப்புகளை அளிக்கிறது. அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவதுடன், தமிழ் கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் பங்குனி உத்திரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை சம்ஹாரம் செய்ததற்கான பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத்தந்த நாள் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் இத்திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீட்டில் தனித்தன்மை பெற்றதாக அமைகின்றது.

தம்பதியர் ஒற்றுமை விரதம்

தம்பதியர் ஒற்றுமை விரதம்


பங்குனி உத்திர நாளில் தம்பதி சமேதரராக இருக்கும் முருகப்பெருமானை மனதில் நினைத்து விரதம் இருப்பதன் மூலம் பிரிந்த தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். சுமங்கலி பெண்களில் பலர் இன்று கோவிலுக்கு சென்று புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது வழக்கம். வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கி கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடும் ஒற்றுமையுடனும் அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவுகிறது.

திருமண வரம் தரும் விரதம்

திருமண வரம் தரும் விரதம்

பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரும் வரன் கை கூடி வரும் என்பதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டும். திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும்.

களத்திர தோஷம் நீங்கும்

களத்திர தோஷம் நீங்கும்

பங்குனி உத்திர நாளில் தான் முருக பெருமான் தெய்வானையை மணந்துள்ளார். சிவன் பார்வதி, ராமன் சீதை, தேவேந்திரன் இந்திராணி போன்றோர்களின் திருமண நாளாகவும் பங்குனி உத்திர நன்னாள் திகழ்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவத்தை காண்பது சிறப்பம்சம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

முருகன் ஆலயங்களில் திருவிழா

முருகன் ஆலயங்களில் திருவிழா

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழனி மருதமலை, பழமுதிர்சோலை, உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் பங்குனி உத்திரம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனைக் காண தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தீர்த்த காவடி, மயில் காவடிகள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர்.

பழனியில் திருக்கல்யாணம்

பழனியில் திருக்கல்யாணம்

பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு பழனியில் முத்துக்குமாரசுவாமியின் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர். திருஆவினன்குடியில் தீர்த்த காவடியுடன் பக்தர்கள் மேள தாளங்களுடன் ஆடிவருவது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது. திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதராக வெள்ளி ரதத்தில் திருவீதி உலா வந்தனர்.

பங்குனி உத்திர தேரோட்டம்

பங்குனி உத்திர தேரோட்டம்

பழனியில் இன்று நடைபெறும் திருக்கல்யணத்தையும், வெள்ளிரத ஊர்வலத்தையும் காண வரும் பக்தர்கள் தீர்த்தக்காவடியையும் சுமந்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் நாளைய தினம் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பக்தர்கள்

பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பக்தர்கள்

பழனி மலை அடிவாரத்தில் பக்தர்கள் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து அதனை முருகனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் ஊருக்கு எடுத்துச் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருளாக மலை வாழைப்பழம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 25 லட்சம் வாழைப்பழங்கள், அதாவது 500 டன் அளவிற்கு மலை அடிவாரத்தில் விற்பனைக்காக மழை வாழைப்பழம் கொண்டுவரப்பட்டுள்ளன. பழனி நகரம் முழுவதும் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுவதால் எங்கும் அரோகரா முழக்கம் எதிரொலிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+