பல்லி விழும் பலன்.. கண் மீது பல்லி விழுந்து விட்டதா? கவலைப்படாதீங்க.. தோஷத்திற்கு பரிகாரம் என்ன?
சென்னை: பல்லியை பார்த்தாலே பலருக்கும் அலர்ஜி. கத்தி கூப்பாடு போடுவார்கள். மனிதர்கள் மீது பல்லி விழுந்தால் அது விழும் இடத்திற்கு ஏற்ப பலன் சொல்லுவார்கள். நம்முடைய உடம்பில் தலை முதல் கால் வரை பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன் கிடைக்கும். பல்லி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
பல்லிகள் நம்முடைய வீட்டில் நம்முடனேயே வசிக்கும் ஒரு உயிரினம். நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினால் தீயவை நடக்கும் என்று கூறுவார்கள். பண்டைய காலங்களில் பல்லியைப் பற்றி கௌளி சாஸ்திரம் என்று படித்திருக்கிறார்கள்.மனிதர்களுக்கு நல்ல சகுனங்களையும் கெட்ட சகுனங்களையும் பல்லிகள் மூலம் உணர்த்துவதற்கு கடவுள் அனுப்பிய ஒரு உயிரினம்தான் என்று புராணங்கள் சொல்கின்றன.

நம்முடைய வீட்டில் பல்லி இருப்பது மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை நாளில் வீட்டிற்குள் பல்லியை பார்த்தால் அந்த குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை அதிகம் உண்டு. இன்றைக்கும் அட்சய திருதியை நாட்களில் பல்லியை பார்த்தால் செல்வம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது கண்களின் மீது பல்லி விழும். கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் வரும். வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும். மூக்கின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கவலை அதிகரிக்கும். மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய்கள் வரும். காதின் இடது பக்கம் பல்லி விழுவது லாபத்தை தரும். வலது காதின் மீது பல்லி விழுந்தால் ஆயுள் கூடும்.
பல்லியானது தலையில் பட்டு, முகத்தில் விழுந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். முகத்தில் நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.
கழுத்தில் பல்லி விழுந்தால்: தலையின் வலது பக்கத்தில், கழுத்துக்கு மேல் பல்லி விழுந்தால் அல்லது பட்டால், பல்லி விழுந்தவரின் மூத்த சகோதரர் அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும். தலையின் இடது பக்கத்தில், கழுத்துக்கு மேல் பல்லி விழுந்தால் அல்லது பட்டால், பல்லி விழுந்தவரின் மூத்த சகோதரர் அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும்.
பொதுவாகவே, தலையில் பல்லி விழுந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. தலையின் ஒவ்வொரு பகுதியில் விழுந்தாலும், ஒவ்வொரு பலன் இருக்கும். தலையில் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம், தலையின் வலது பக்கம் விழுந்தால் கலகம் வரும் என்று சொல்வார்கள்.
தலையின் முன்பகுதியில் பல்லி விழுந்தால் நிதி ரீதியான ஆதாயங்கள், லாபம் கிடைக்கும். தலையின் பின் பகுதியில் பல்லி விழுந்தால், தடைகள் ஏற்படும், எதையாவது செய்ய திட்டமிட்டிருந்தால் அது தாமதமாகும்.
தலையின் நடுப்பகுதியில், உச்சி மண்டையில் பல்லி விழுந்தால், உடல் நல பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே உடல் ரீதியான பாதிப்புகள் இருந்தால், மருத்துவ ஆலோசனை மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
தலை முடியில் படும் படி பல்லி விழுந்தால் கவனம் தேவை. வாகன பயங்களில் நிதானமாகவும், கவனமாகவும் வாகனத்தை ஓட்ட வேண்டும். பெண்களுக்கு, நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் இடத்தில், பல்லி விழுந்தால், அல்லது பட்டால், விழுந்தவரின் அம்மா அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும்.
ஆண்கள் அல்லது பெண்களில் பின் தலையில், முடியில் பல்லி விழுந்தால், விரும்பத்தகாத நிகழ்வு ஏற்படும். இது உடல் நலம் பாதிப்பையும் குறிக்கும். சொத்து இழக்க நேரிடும் அல்லது பணம் தொலைந்து போகலாம்.
நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.
மார்பின் இடது பக்கம் பல்லி விழுந்தால் அது சுகம். வலது மார்பு பக்கம் பல்லி விழுந்தால் லாபம். கழுத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை. தோளின் இடது, வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி தேடி வரும்.
வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி. வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் வரும். முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை.
தொடையில் பல்லி விழுந்தால் மன சஞ்சலம் ஏற்படும். பிருஷ்டத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் செல்வம் வரும். வலது பிருஷ்டத்தில் பல்லி விழுந்தால் சுகம் வரும்.
பல்லி நம்முடைய உடம்பில் ஏதாவது ஒரு பாகத்தில் விழுந்து விட்டால் உடனே பயப்பட வேண்டாம். முதலில் நன்றாக குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வணங்கலாம். கோவிலுக்கு போக முடியாவிட்டால் வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி குல தெய்வத்தை வணங்கலாம். தோஷங்கள் நீங்கும். ஒருவர் மீது அடிக்கடி பல்லி விழுந்தால், மகா மிருத்யுன்ஜ மந்திரத்தை தினசரி 9 முறை சொல்லலாம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள தங்க பல்லியை தரிசனம் செய்தால் பல்லியால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பதும் நம்பிக்கையாகும். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தங்கம், வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதைத் தொட்டு வணங்கிச் சென்றால் சகல தோஷங்களும் விலகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications