வேலுண்டு வினையில்லை..கவலைகளை தீர்க்க கந்தன் வருவான்..பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்!
சென்னை: தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரம் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. காவடிகள் சுமந்து வந்து கந்தனை வணங்கி செல்கின்றனர் பக்தர்கள். திருக்கல்யாண நிகழ்வுகளும், திருத்தேரோட்டத்தையும் காண பக்தர்கள் கூட்டம் முருகன் ஆலயங்களில் அலைமோதி வருகிறது. பங்குனி உத்திரம் நன்னாளில் ஒன் இந்தியா நேயர்களுக்காக சில வாழ்த்து அட்டைகளை தயாரித்து வழங்கியுள்ளோம். உங்களுக்கும் உங்களின் நண்பர்கள் உறவினர்களுடன் இந்த பங்குனி உத்திரம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பங்குனி உத்திரம் என்பது பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப்பெரியதாகவும் மிகப்பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம்.
பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள் தான். எம்பெருமான் சொக்கநாதர்-அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர நாளில் தான். சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரருக்கு மதுரையில், சிவபெருமான் அன்னை பார்வதி தேவியோடு மணக்கோலத்தில் காட்சியருளியதும் இந்த நன்னாளில் தான். இதனால் தான் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவம் என சகலமும் நடைபெறும். இத்தனை சிறப்புகள் வாய்ந்ததால் தான் பங்குனி உத்திர நாளில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நல்ல நாளில் பங்குனி உத்திர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

நோய்கள் தீர்க்கும் கந்தன்
கந்த சஷ்டி கவசம் படித்தால் நோய்கள் நீங்கும். மன கவலைகள் போகும். அத்தனை மகிமை நிறைந்தது கந்த சஷ்டி கவசம். கந்தன் கவசம் நோய்கள் தீர்க்கும்..முருகன் நாமம் மன பயம் போக்கும்..வேலவனை நினைத்தால் வெற்றிகள் தேடி வரும்..பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்

மயில்மேல் வருவான் முருகன்
முருகப்பெருமான் பக்தர்கள் மன கவலைகளை போக்க மயில் மேல் வருவான். நம்முடைய வேதனைகளை தீர்க்க
வேல் கொண்டு வருவான் வேலவன். எத்தனை துயரம் வந்தாலும் முருகனை நினைத்தால் துன்பங்கள் எளிதில் நீங்கும்
பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்

சிவ மைந்தன் கருணை
சிவனின் மைந்தன் சிக்கல்களை போக்குவான். சிக்கலில் உள்ள சிங்கார வேலவன் சீக்கிரம் வருவான்.
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் கந்தனை நினைத்தால் போதும் மலையாக நம்முன் உள்ள துன்பங்களை
பொடி பொடியாக்குவான் சிவ மைந்தன் பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்.

கவலைகள் தீர்க்கும் கந்தன்
நம்முடைய மனதில் உள்ள துயரங்களை போக்கவும்..துன்பங்களை நீக்கவும் ஓடோடி வருவான் கந்தன். முருகனை நம்பினால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் கந்தனை நம்பினால் கவலைகள் மாயமாகும் பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்.

யாமிருக்க பயமேன்
வேலாயுதனை நினைத்தால் வேதனைகள் நீங்கும். கஷ்டங்களை நீக்க கந்தன் வருவான். நாம் மனதில் நினைத்ததை நிறைவேற்ற கவலைகளை தீர்க்க முருகன் வருவான். முருகனை நினைத்தால் வேதனைகள் தீரும்..யாமிருக்க பயமேன்! பங்குனி உத்திர நல் வாழ்த்துக்கள்.

கந்தன் வருவான் காக்க
வேலுண்டு வினையில்லை..மயிலுண்டு பயமில்லை..கந்தன் உண்டு கவலையில்லை எத்தனை பிரச்சினை இருந்தாலும் அத்தனையில் இருந்தும் நம்மை காக்க வேலவன் வருவான்! பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications