பன்னிரு கை வேலவனுக்கு உகந்த பங்குனி உத்திரம்..விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள்
சென்னை: தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் திருநாள் இந்த ஆண்டு முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்கிழமை வருவது சிறப்பு வாய்ந்தது. நல்ல வேலை கிடைக்கவும், மனம் போல மாங்கல்யம் கிடைக்கவும், நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவும் பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து வணங்கலாம். பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் அரசு வேலையும் பதவி உயர்வும் தேடி வரும்.
தமிழ் மாதங்களில் 12ஆவது மாதம் பங்குனி, 27 நட்சத்திரங்களில் 12ஆவது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும். எனவேதான் பன்னிரு கை வேலவனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும் முருகப்பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா 12 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படுகிறது.
தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வார்கள். இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்தால் திருமணம் கைகூடும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால் பங்குனி உத்திர விரதத்தால் கிடைக்கும். அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும், அரசு சார்ந்த காரியங்கள் நடக்கும். சிலருக்கு பணியிடத்தில் இழுபறியாக இருக்கும் பதவி உயர்வு கிடைக்கும்.

பங்குனி உத்திர திருவிழா
பங்குனி உத்திர திருவிழா, இதற்குப் பெயர் கோடை வசந்த விழாவின் நுழைவு விழா என்று தான் அர்த்தம். பங்குனி மாதம் பிறந்து விட்டாலே கோடையும் வசந்தமும் வந்து விட்டது என்று தான் அர்த்தம். கோடை காலத்தின் ஆரம்பமே பங்குனி மாதம் தான். அதனால் தான் அதை வரவேற்கும் விதமாக விதமாக வசந்த விழா கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் சகோதரத்துவத்தை வலியுறுத்தவும் எப்படி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதோ, அது போலவே நம் தமிழகத்தில் பங்குனி உத்திரப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம்.

பங்குனி உத்திரம் சிறப்பு
பங்குனி உத்திரம் என்பது பவுர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பவுர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பவுர்ணமி நிலவு மிகப்பெரியதாகவும் மிகப்பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம்.

முருகன் தெய்வானை திருமணம்
பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள் தான். எம்பெருமான் சொக்கநாதர்-அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர நாளில் தான். சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரருக்கு மதுரையில், சிவபெருமான் அன்னை பார்வதி தேவியோடு மணக்கோலத்தில் காட்சியருளியதும் இந்த நன்னாளில் தான். இதனால் தான் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவம் என சகலமும் நடைபெறும்.

இந்திரன் இந்திராணி திருமணம்
பங்குனி உத்திர நன்னாளில் தான், அகத்தியர் லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்டதாக கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரன்-இந்திராணி திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். அது மட்டுமல்ல, நவக்கிரக மண்டலத்தில் உள்ள சந்திரன் அழகும் திறமையும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் செய்து கொண்டதும் இந்த பங்குனி உத்திர நாளில் தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

பங்குனி பிரம்மோற்சவம்
இத்தனை சிறப்புகள் வாய்ந்ததால் தான் பங்குனி உத்திர நாளில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கோயில்களிலும் பங்குனி பிரம்மோற்சவம், உத்திரத் திருவிழா, தேரோட்டம் என்று தமிழ் நாடெங்கும் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கி விடும். அது மட்டுமல்ல, பங்குனி உத்திரம் நட்சத்திரத்தின் மகிமையை பல்வேறு புராணங்களும் போற்றி புகழ்கின்றன.

மகாலட்சுமி அவதாரம்
செல்வத்தின் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். காக்கும் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் இருந்த ஸ்ரீமகாலட்சுமிக்கு, ஸ்ரீமகாவிஷ்ணு தன்னுடைய திருமார்பில் வீற்றிருக்கும் வரத்தை அளித்ததும் பங்குனி உத்திரத் திருநாளில் தான் என்கிறது வரலாற்று ஆதார நூலான விஷ்ணு புராணம். நம்முடைய செல்வ வளம் சிறக்க இந்நாளில் ஸ்ரீமகாலட்சமிமைய வேண்டி விரதம் இருந்தால் சகல செல்வ வளங்களும் நமக்கு கிட்டும். ஸ்ரீஆண்டாள்-ரங்கமன்னார், நந்திதேவர்-சுயசை திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான்.

சபரிமலை சாஸ்தா அவதாரம்
அது மட்டுமா, படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தன்னுடைய நாவில் கல்விக் கடவுளான சரஸ்வதியை அமர்த்திக்கொண்டதும் பங்குனி உத்திரத் திருநாளில் தான். பிரம்மச்சாரிய கடவுளான ஸ்ரீசபரிமலை சாஸ்தாவான ஐயப்பன் அவதரித்ததும், பூரணா-புஷ்கலாவை மணம் செய்து கொண்டதும் இந்நன்னாளில் தான். அதேபோல் மன்மதன் ரதிதேவியை மணம் செய்து கொண்டதும் இந்த நாளில் தான்.

பங்குனி விரத மகிமை
நாம் என்னதான் வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளோடு இருந்தாலும், சுப நிகழ்வுகள் நடக்க இறைவனின் திருவருள் அவசியம் வேண்டும். அதற்கு கைகொடுப்பது பங்குனி உத்திர விரதம் தான். சிலருக்கு திருமணம் கைகூடாமல் தள்ளிப்போனால், பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் வெகு சீக்கிரம் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அதோடு, மனதுக்கு பிடித்தவரை கரம் பிடிக்கவும் பங்குனி உத்திர விரதம் இருப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

அரசு வேலை கிடைக்கும்
ஒரு நபரின் ஜாதகத்தில் மன உறுதி, தைரியம், தந்தை உறவு நன்றாக அமைய, தொழில், உத்தியோகம் சிறக்க, அரசு சார்ந்த காரியங்கள் நல்லபடியாக நடக்க சூரியன்தான் காரகராக இருப்பார். இப்படிப்பட்ட சூரிய பகவானுக்கு உரிய உத்திர நட்சத்திரமும், சூரிய பகவான் தன்னுடைய ஓராண்டு பயணத்தை நிறைவு செய்யும் கடைசி மாதமான பங்குனியும் இணைந்து வரும் நாள் ரொம்ப சிறப்பானது. இந்த நாளில் முருகனை வழிபாடு செய்தால் அரசு சார்ந்த காரியங்கள் எல்லாம் சுபமாக முடியும்.

பதவி உயர்வு தரும் பங்குனி உத்திர விரதம்
உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி என்றால் சூரிய பகவான் தான். தலைமை பொறுப்புக்கு சூரிய பகவான் தான் காரகம் என்பதனால், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கினால் நல்ல வேலையும் வேலையில் இருப்போர்களுக்கு பதவி உயர்வும் தேடி வரும். வேலை தேடுபவர்கள் எப்போதும் நல்ல நிறுவனத்தில் சேர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். முருகனை வேண்டிக் கொண்டால் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் பங்குனி மாத விரதம் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications