திருப்பதிக்கு பிப்ரவரியில் போகணுமா? ரூ 300 டிக்கெட் தீர்ந்து போச்சா! காலை 10 மணிக்கு ரெடியா இருங்க
திருப்பதி: திருப்பதிக்கு பிப்ரவரி மாதம் போவதற்கு பிளான் இருக்கும் நிலையில், ரூ 300 தரிசன டிக்கெட் தீர்ந்துவிட்டால் கவலைப்படாதீர்கள். இன்று காலை 10 மணிக்கு புக்கிங் செய்துக் கொள்ளலாம்.
திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாதந்தோறும் ரூ 300 தரிசன டிக்கெட் விற்பனையாகிறது. இந்த டிக்கெட் சில நேரங்களில் கிடைக்கும், சில நேரங்களில் கிடைக்காது. இதனால் வேறு சில வழிகளிலும் ஏழுமலையானை தரிசிக்கலாம்.

ஏற்கெனவே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களும் ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் விற்கப்பட்டு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன. இனி திருப்பதிக்கு செல்ல வேண்டுமானால் இலவச தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவைகளில் மட்டும்தான் செல்ல வேண்டுமா? என்றால் அப்படி இல்லை!
ரூ 300 தரிசன டிக்கெட் விற்றுவிட்டாலும் அதே ரூ 300 டிக்கெட்டை வைத்துக் கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாமே! அதாவது ஸ்ரீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமம் என்பது அலிபிரி அருகே இருக்கும் கோயிலில் நடைபெறும். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் புக் செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொரு மாதமும் 24 அல்லது 25 தேதிக்கு பிறகு புக்கிங் செய்யப்படுகிறது. ரூ 1600 செலுத்தி ஹோமத்தில் கலந்து கொள்ளலாம். ரூ 1000 ஹோமத்திற்கு போக மீதமுள்ள ரூ 600 இல் இரு ரூ 300 சிறப்பு தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இந்த ஹோமத்தில் கண்டிப்பாக கலந்து கொண்டால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஹோமமானது தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஹோமத்திற்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாகிறது. இந்த டிக்கெட்டுகளை புக் செய்து கொண்டால் டிசம்பர் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கும். இவற்றை கொண்டு நீங்கள் செல்லும் தினத்தில் மாலை 3 மணிக்கு நேராக ரூ 300 தரிசனத்திற்கு செல்லும் வரிசையில் நின்றுவிடலாம். எனவே 10 மணிக்கு ஆதார் தகவல்களுடன் புக் செய்து விடுங்கள்.












Click it and Unblock the Notifications