Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போகி பண்டிகை... வீட்டில் காப்பு கட்டுவது ஏன்? மறந்தும் கூட சில தவறுகளை செய்யாதீர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. வீடுகளை சுத்தம் செய்து அலங்கரிக்கத் தொடங்கியுள்ளன. தை பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகை நாளில் மூலிகை செடிகளை வைத்து காப்பு கட்டுவார்கள் அதன் தத்துவத்தையும், போகி நாளில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகளைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

இந்திர விழா போகி: போகி பண்டிகையை கொண்டாடுவதால் இன்பம் மற்றும் போகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்திர பகவான் மட்டுமல்லாது சுக்கிர பகவானும் போகத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். சுக போக வாழ்க்கையை பெறுவதற்கு சுக்கிர பகவானின் அருள் நமக்கு தேவை. சுக்கிரன் பார்வை வலுவாக இருக்கும் பொழுது ஒருவர் பணக்காரராக முடியும் என்று நம்பப்படுகிறது. இதனால் தான் போகி பாண்டியை முதன்மையானதாக கருதுகின்றனர்.

Pongal 2024: Bhogi Festival dos and dont Mahalakshmis anger will increase!

தமிழர் மரபு: தமிழ் ஆண்டின் ஒன்பதாவது மாதமான மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது நாளை போகி கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் இந்தப்பண்டிகை 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகி நாளில் வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை எரித்து, வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள், மாவிலைத் தோரணத்துடன் காப்பு கட்டி தை மகளை வரவேற்பது தமிழர் மரபு.

பழையன கழிதல்: பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையில் இருந்து தான் இத்திருநாள் தொடங்குகிறது. போகி பண்டிகையை எதற்காக கொண்டாடுகிறோம் என்று கேட்டால், 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று குறிப்பிடுவோம். அதாவது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு எரித்து புதியவற்றை கொண்டு இனி வரும் நாட்களை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிடுவார்கள்.

நல்ல எண்ணங்கள்: உண்மையில் போகி பண்டிகை என்றால் நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள், அழுக்கு, தீய குணங்கள் போன்றவற்றை முற்றிலுமாக நீக்கி, புதிய நல்ல எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதை உணர்த்தும் வகையில் தான் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து வருகிறோம். தீய எண்ணங்களை எரிப்பதற்கு இது சமமாகும் என்று நம்பப்படுகிறது.

காப்பு கட்டுதல்: போகியை கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இந்திர பகவான் தான். ஆம், தேவர்களின் அரசன் மற்றும் மழையின் கடவுளான இந்திர பகவானுக்காக தான் பாரம்பரியமாக போகி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். நம் முன்னோர்கள் போகிப்பண்டிகை நாளில் ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து காப்பு கட்டி அதை நோயில் இருந்து காக்கும் முதலுதவிப் பெட்டியாக கட்டி வைத்துள்ளனர்.

கோலங்கள்: இந்த நல்ல நாளில், தங்களில் வீட்டின் முற்றத்தில் மக்கள் பாரம்பரிய முறையில் கோலங்களை அரிசி மாவு பயன்படுத்தி போடுவது வழக்கம். அடுத்தாக, விவசாயிகள் தங்கள் உபகரணங்களை வணங்குவார்கள். மேலும் இந்திரனை வணங்கி இந்த வருடம் நல்ல விளைச்சலை தர வேண்டும் என்று வணங்கி மகிழ்வார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

மகாலட்சுமிக்கு வரவேற்பு: போகி பண்டிகை நாளில் விளக்கேற்றும் முன்பாக காப்புகட்டுகின்றனர். விடிய விடிய விளக்கேற்றி கடவுளை வரவேற்கின்றனர். காப்புக் கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. விஷக்கடி, அலர்ஜி, வயிற்றுப்போக்கு போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த காப்பினை கட்டுகின்றன. காப்புக் கட்டும் போது அதில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகள் அடங்கியிருக்கும். காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகளை விட்டு தற்போது ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை வைத்து கட்டுகின்றனர்.

காரணம் என்ன: வேப்பிலை சிறந்த கிருமிநாசினி. காற்றில் பரவும் கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் காப்புக் கட்டு சடங்கு மூலமாக வீட்டிலும் வேப்பிலையை வைத்திருக்கச் செய்தார்கள் முன்னோர்கள்.

நோய் நீக்கும் மூலிகைகள்: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் சிறுபீளை மூலிகை மார்கழி மாதப் பனியில் செழிப்பாக வளர்ந்திருக்கும். சிறுநீர் கல்லை உடைக்கும் அபாரமான சக்தி படைத்தது இந்த மூலிகை. நீர்க்கடுப்பு, சிறுநீர் கல் போன்ற பிரச்னைகளுக்காகவே இதனையும் காப்புக் கட்டு என்ற பெயரில் வீட்டில் வைத்திருந்தனர் முன்னோர்கள். உடல் சூட்டைத் தடுக்கும் அற்புதமான மூலிகை ஆவாரை. ஆவாரம் பூ இதழ்களை, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும்.

அவசியம் செய்ய வேண்டியவை: போகி நாளில் நாம் வீட்டில் அழகாக சுத்தமாக வைத்திருப்பது அவசியம். சமையல் அறையில் அரிசி மாவினால் கோலம் போட்டு அலங்கரித்து அரிசி, பருப்பு, புளி, மிளகாய், சர்க்கரை ஆகியவைகளை சிறுசிறு கிண்ணங்களில் போட்டு வைத்து சிறிய விளக்கேற்றி வைக்க வேண்டும். அது அணையாத விளக்காக இருந்தால் கூடுதல் சிறப்பு.

செய்யக்கூடாதவை: மறந்தும் கூட இந்த நாளில் வீட்டை அசுத்தமாக வைத்து விடாதீர்கள். அதோடு வீட்டில் இருக்கும் நெய், தயிர், உப்பு போன்ற பொருட்களை கடனாக கொடுக்கக்கூடாது. இதன் மூலம் அன்னை மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதன் மூலம் நம்மிடம் இருக்கும் செல்வம் நம்மை விட்டு நீங்கி வேறு இடத்திற்கு சென்று விடும் என்பதால்தான் போகி நாளில் சில பொருட்களை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தானமாகவோ, கடனாவோ தரக்கூடாது என்று சொல்லி வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+