அதிர்ஷ்டம் இப்படிகூட அடிக்கும்.. கல் உப்பு, பச்சை கற்பூரம் இருக்கா? அப்ப பணம் கொட்டும்! செம பரிகாரம்
சென்னை: வீட்டிலுள்ள கஷ்டமும், வறுமையும் நீங்கி, பணம் தங்க வேண்டுமா? ஆரோக்கியம் நீடிக்க வேண்டுமா? கல்உப்பு, கற்பூரம் இருந்தாலே போதுமே.. இந்த 2 பொருட்களை வைத்து எளிய பரிகாரங்கள் செய்யும்போது, வீட்டிலுள்ள துன்பத்தை எளிதில் போக்கிடலாம் என்கிறார்கள். எப்படி தெரியுமா?
பெரும்பாலான குடும்பங்களில், தெரிந்தோ, தெரியாமலோ சில செயல்களை செய்துவிடுகிறார்கள். இதில் ஒருசில செயல்கள், நமக்கே எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதாவது அறியாமல் செய்யும் பிழைகளால், இப்படியான கஷ்டங்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது.

பரிகாரங்கள்: இத்தகைய சிக்கல்களை, எளிய பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.. ஏழ்மை, வறுமையை விரட்டி, பணவரவை உண்டுசெய்யும் பரிகாரங்கள் எண்ணற்ற இருந்தாலும், 2 வகையான பரிகாரங்களை இங்கே பார்ப்போம்.
கல் உப்புகள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.. இந்த கல் உப்பு எப்போதுமே நம்முடைய வீட்டில் இருக்க வேண்டும் என்பார்கள்.. காரணம், வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் கொண்டுவர செய்யும் அற்புத சக்தி இந்த உப்புக்கு இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, கல் உப்புக்கள் மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது.. எனவே, நேர்மறை ஆற்றலை அள்ளி தந்து, சகல செல்வங்களையும் வழங்கும் ஐஸ்வர்யமாக பார்க்கப்படுகிறது.
கல் உப்பு தீபம்: இதற்கு கல் உப்பு தீபம் ஏற்றி வைக்கும்போது, குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும் என்பார்கள்.. எனவே, பௌர்ணமி நாட்களில் கல்உப்பு தீபம் ஏற்றி வரும்போது, தொழில் தடை, வருமான தடைகள் போன்றவை அடுத்த 48 நாட்களுக்குள் விலகிவிடுமாம்.
அதேபோல, ஒரு கண்ணாடி பாத்திரத்தில், கல் உப்பை போட்டு, அதனுள் எலுமிச்சம்பழத்தையும் போட வேண்டும். பிறகு 4 காய்ந்த மிளகாய்களையும், அந்த பாத்திரத்தின் 4 மூலைகளிலும் வைத்து, அதனை தலைவாசல் கதவின் உட்புறம் பகுதியில் வைத்துவிட வேண்டும். இந்த கல்உப்பு, மிளகாயின் கூர்மையான பகுதிகள், இவை இரண்டுமே எதிர்மறை சக்திகளை ஈர்த்துவிடக்கூடியவை...
உப்பு, மிளகாய்: எனவே, வாரம் ஒருமுறை இந்த உப்பு, மிளகாயை மாற்றிவிட புதிதாக வைக்க வேண்டும். பழைய உப்பு, மிளகாயை, ஓடும் நேரில் போட்டுவிட வேண்டும.
அதேபோல கற்பூரங்கள் சுவாச கோளாறுகளை குணப்படுத்தக்கூடியவை. கற்பூரத்தை வீட்டில் வைத்திருந்தாலே, அது காற்றில் பரவி நல்ல நறுமணத்தை தருவதோடு சுவாசத்திற்கும் ஆரோக்கியத்தை தரக்கூடியது.. பச்சைக்கற்பூரம் மனதிற்கு புத்துணர்ச்சி தரவல்லவை.. இதன் மணம் நேர்மறை எண்ணங்களை அதிகமாக்கி, நல்ல எண்ணங்கள் உணர்வுகள் மேலோங்கச் செய்யும்.
பச்சை கற்பூரம்: எனவே, பச்சை கற்பூரத்தை வைத்து எளிய பரிகாரங்கள் செய்யலாம்.. ஒரு கிண்ணத்தில், பச்சை கற்பூரம், 4 கிராம்பு, 2 ஏலக்காய், அரை ஸ்பூன் சோம்பு என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும். இந்த தட்டை பூஜை அறையின் தென் மேற்கு மூலையில் வைத்துவிட வேண்டும். இப்படி வைப்பதால், வீட்டிலுள்ள கஷ்டங்கள் குறையும் என்று நம்பப்படுகிறது.. அல்லது பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம்.
கடன் தொல்லை தீர்வதற்காக, நீங்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கும்போது, இப்படியொரு பச்சை கற்பூர பரிகாரத்தையும் செய்வதால், விரைவில் பலன் கிடைக்குமாம்.
கல் உப்பு, கற்பூரம்: அதேபோல, ஒரு புதிய தட்டில் கல் உப்பை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து, மனதில் இறைவனை நினைத்தபடி அந்த கற்பூரத்தை ஏற்ற வேண்டும். அந்த கற்பூரம் எரியும் கல்உப்பு பரப்பிய தட்டை, கையில் பிடித்து, வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள், கண்திருஷ்டி எல்லாமே விலக வேண்டும் என்று நினைத்து, குலதெய்வ படத்திற்கும், வீடு முழுவதும் தீபாராதனை தீபத்தை காட்ட வேண்டும்.
இப்போது கற்பூரம் எரிந்து முடிந்ததுமே, தட்டிலுள்ள உப்பை, ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதை கொண்டுபோய், வீட்டிற்கு வெளியே ஊற்றி விட வேண்டும். செவ்வாய், வெள்ளி தவிர, மற்ற கிழமைகளில், இப்படியே தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வந்தால், குடும்பத்திலுள்ள மொத்த திருஷ்டியும் விலகிவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications