Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அள்ளிக்கொடுப்பார் ராகு... மாற்றங்களை ஏற்படுத்தும் ராகு திசை காலம் எப்படியிருக்கும் - யாருக்கு யோகம்

ஒருவரின் ஜாதகத்தில் ராகு பலமாக இருந்தால் சுப கிரகங்களின் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் அள்ளிக்கொடுப்பார். அதே தீயவர்களின் சேர்க்கை பெற்றிருந்தால் கெடுதல் செய்து தடைகளை ஏற்படுத்துவார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீர் பணவரவு எதிர்பாராத யோகத்திற்கு சொந்தக்காரர் ராகுதான். ஒருவருக்கு திடீரென்று ராஜயோகம் வரும் வருமானம் அள்ளி கொட்டும். அவருக்கு ராகு திசை வந்திருக்கும். தசை என்பது, மனிதனின் வாழ்நாட்களில் கிரஹங்கள் ஆட்சி செலுத்தும் கால அளவு. மொத்தம் ஒன்பது தசை இருக்கின்றன. இந்த தசை காலம் மொத்தம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசைக்கும் ஒன்பது கிரகங்களும் ஒன்பது புத்திகளாக ஆட்சி செலுத்துகின்றன.
ராகு திசை ஒருவருக்கு 18 ஆண்டுகள் நடைபெறும். இந்த 18 ஆண்டுகளில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவரை மிகப்பெரிய செல்வந்தராக மாற்றுவார். குப்பை மேட்டில் இருப்பவரைக் கூட கோபுரத்தில் அமரவைப்பார். அந்த அளவிற்கு ராகு கொட்டிக்கொடுப்பார்.

ராகுவைப் போல கொடுப்பாருமில்லை... கேதுவைப் போல கெடுப்பாருமில்லை என்பார்கள். ராகு எதைக் கொடுத்தாலும் அள்ளிக் கொடுப்பார். அதே நேரத்தில் ராகு பலமிழந்து இருந்தால் எதற்கெடுத்தாலும் தடையை ஏற்படுத்துவார். திருமண தடை, குழந்தை பாக்கியத்தில் தடை, வசதி வாய்ப்பில் தடையை ஏற்படுத்துவார்.

ராகு நிழல் கிரகம். பிரம்மாண்ட நாயகனான நவகிரகங்களின் தலைவனான சூரியனின் ஒளியை மறைக்கும் சக்தி படைத்தது ராகு கேது. அதே போல சந்திரனின் ஒளியை மறைக்கும் சக்தி படைத்தது ராகு கேது கிரகங்கள்.

ராகு கேது

ராகு கேது

ராகு பிரம்மிக்கத் தக்க கிரகம். கொடுப்பவரும் அவரே தடுப்பவரும் அவரே அவரை புரிஞ்சுக்கவே முடியாது. அவர் நல்லது செய்ய வேண்டுமெனில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ராகு ஆகிய வீடுகளில் இருக்கும் ராகு நல்லதை செய்வார். தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல ராகு செயல்படுவார். திருமணம், குழந்தை பாக்கியம் தடை ஏற்பட காரணம் ராகு கேது கிரகங்கள்தான். சர்ப்ப தோஷம் இருந்தால் திருமண தடை, குழந்தை பாக்கிய தடை ஏற்படும். ராகு ஒருவரின் ஜாதகத்தில் சுப கிரகங்களுடன் இருந்தால் சுப பலன்களை தருவார். அதே நேரத்தில் செவ்வாய், சனி தொடர்பு ஏற்படும் போது சாதகமற்ற பலனை தருவார்.

நல்லதே செய்வார் ராகு

நல்லதே செய்வார் ராகு

ராகு திசை ராஜயோகங்களில் முதன்மையானது ராகு. சுபத்துவமான ராகு ஒருவருக்கு ராஜயோகத்தை அள்ளித்தருபவர். ஒருவருக்கு ராகு பலன் தர வேண்டும் என்றால் இயற்கை சுபரின் வீட்டில் இருக்க வேண்டும். திடீர் பிரபலம் ராகுவினால் நடக்கும். சினிமா, அரசியல் என பிரபலம் அடைய ராகுதான் காரணம். குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் வீட்டில் அமரும் போது அவர்களின் காரகத்தை செய்வார். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் இருக்கும் ராகு சுயமான நன்மை செய்வார். சுபர் தொடர்பு இருந்தால் மேன்மையான பலன் கிடைக்கும். ராகுவை குரு பகவான் பார்த்தால் அவர் கெடுதல் செய்ய மாட்டார். மிகச்சிக்கலான காலகட்டத்தில்தான் கெடுதல் செய்வார். சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களில் லக்னகங்களான ரிஷபம், துலாம்,மிதுனம்,கன்னி, மகரம், கும்பம் சனியின் நண்பர்களான சுக்கிரன், புதன் லக்னங்களுக்கு ராகு திசை நல்லது செய்யும் கெடுதல் செய்யாது.

அற்புத பலன் தரும் ராகு

அற்புத பலன் தரும் ராகு

ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருக்கும் ராகு பலமற்ற நிலையில் இருந்தால் சில நேரங்களில் கெடுதல் செய்யும். வம்பு வழக்கு நோய் கடன் போன்ற பலன்களை கொடுப்பார். ராகுவிற்கு இடம் கொடுத்தவர் வலிமை பெற்றால் ஆட்சி உச்சமாக இருந்தால் அளப்பறிய நன்மைகளை செய்வார் ராகு. தர்ம கர்மாதி எனப்படும் ஒன்பது பத்து இடங்களில் இருந்தால் சாரம் பெற்று அமர்ந்தால் அம்சமான பலன்களை கொடுப்பார்.

 கடல் கடந்து செல்லும் யோகம்

கடல் கடந்து செல்லும் யோகம்

நல்லவன் கெட்டவன் என்று ராகு பார்ப்பதில்லை. பூர்வ புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் எந்த வயதில் அனுபவிக்கப் போகிறீர்கள் என்று உணர்த்துபவர் ராகுதான். பணம் கூரையை பிச்சிச்கொண்டு கொண்டும் என்று சொல்வது அவருக்கு சரியாக இருக்கும். ராகு திசை நடந்தால் கடல்கடந்து வெளியே செல்லுதல். வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார். வெளிமாநிலம் போய் பொருள் தேட வைப்பார். புத்திசாலித்தனமான தன லாபத்தை தருவார். உங்களுக்கு வருமானத்தை கொட்டுவார். அந்த அளவிற்கு கொடுத்து உங்களை திக்கு முக்காட வைப்பார்.
ராகு பலமான இடத்தில் அமர்ந்து சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்றிருந்தால் குழந்தை பருவத்தில் ராகு திசை நடந்தால் உற்சாகமாக இருப்பார்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாகவும் அறிவாளிகளாகவும் இருப்பார்கள். உயர்கல்வி யோகம் அமையும். மத்திம வயதில் ராகு திசை நடந்தால் பணவருமானம் அதிகரிக்கும் கொடுக்கும் ராகு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுப்பார். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பஞ்சனையில் படுக்கும் வாய்ப்பை ராகு தருவார். புகழ் வெளிச்சம் பரவும்.

என்ன செய்வார் ராகு

என்ன செய்வார் ராகு

ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும். ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் ராகு பலமிழந்திருந்தால் மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப்படும் நிலை ஏற்படும்
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும். ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் பணவரவும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரும். குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் புத்திர பாக்கியம் தடை ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.

சொத்துக்கள் வாங்கலாம்

சொத்துக்கள் வாங்கலாம்

ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அசையா சொத்துக்கள் வாங்கலாம். சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும். ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும். புதன் பலமிழந்திருந்தால் பகைவர்களால் தொல்லை ஏற்படும்.

ஆடை ஆபரண சேர்க்கை

ஆடை ஆபரண சேர்க்கை

ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும். கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும். கேது சரியில்லாத நிலையில் இருந்தால் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்படும். ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், பணநஷ்டம், இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும்.

உயர்பதவிகள் வரும்

உயர்பதவிகள் வரும்

ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும். சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள் கிடைக்கும். சூரியன் பலமிழந்திருந்தால் தலைவலி, இருதய கோளாறு தொழில் வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும். சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை ஏற்படும்.

உடன் பிறந்தவர்களால் நன்மை

உடன் பிறந்தவர்களால் நன்மை

ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை, வீடு, வண்டி வாகன யோகம் அமையும். தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும். நல்ல உடல் ஆரோக்கியம் உயர் பதவிகள் கிடைக்கும். செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் பாதிப்பு, தொழில் உத்தியோத்தில் விண் பிரச்சினை வரும். ஜாதகத்தில் 6ஆம் வீடு 8ஆம் வீடுகளில் சனி செவ்வாய் இருந்து ராகு திசை நடக்கும் காலங்களில் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஒருமுறை காளஹஸ்தி சென்று காளத்திநாதரையும் அன்னை ஞானபிரசன்னாம்பிகையை தரிசனம் செய்து வரலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+