Aadi Amavasai: இன்று ஆடி அமாவாசை! ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயில் நடை பகல் முழுவதும் திறப்பு
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, இன்று (ஆடி அமாவாசை) பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக அதிகாலை 4:30 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை, மதியம் 1 மணிக்கு மூடப்பட்டு, பின்னர் 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். ஆனால், இன்று மதிய நேரத்தில் கோயில் நடை மூடப்படாமல், பகல் முழுவதும் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவிழா நிகழ்வுகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நேற்று (4ஆம் நாள் விழா): காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
- இன்று (6ஆம் நாள் விழா - ஆடி அமாவாசை): காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப் பல்லக்கிலும், அதைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னி தீர்த்தக் கடற்கரைக்குத் தீர்த்தவாரி பூஜைக்காக எழுந்தருள்கிறார்கள்.
- நாளை (7ஆம் நாள் விழா - வெள்ளிக்கிழமை): இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.
- 27-ஆம் தேதி (9ஆம் நாள் விழா): காலை 10 மணிக்கு அம்பாள் தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.
- ஆகஸ்ட் 4ஆம் தேதி: சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோயிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ராமேஸ்வரம் திருத்தலம் ஒரு புண்ணியத் தலமாகும். இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தங்கள் முன்னோர்களுக்குத் திதி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில்களிலும் ஆடி அமாவாசை விழா நடைபெறுகிறது. அது போல் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகாலையிலேயே நீர் நிலைகளில் திரண்டுள்ளனர்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications