ரேவதி, ஆயில்யம், கேட்டை நட்சத்திரத்துக்குரிய புதன்கிழமை.. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.. ஏன்?
சென்னை: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்களே, ஏன் தெரியுமா? புதன்கிழமைகளில் என்னென்ன காரியங்களை செய்யலாம்? என்னென்ன வழிபாடுகளில் ஈடுபடலாம்? இதுகுறித்து முன்னோர்கள் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்கள். அதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
புதன்கிழமை, புதன் கிரகத்திற்குரிய நாளாகும்.. புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சையாகும்.. புதன்கிழமையில் பச்சை நிற ஆடை அணிவது புதன் தோஷத்தை போக்கும்.. புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம். என்பார்கள்.

நட்சத்திரங்கள்:
புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த பலனை பெற்றுத்தரும்..
இதனால் தொழிலிலும் வளர்ச்சியை காண முடியும்.. பொருளாதாரத்திலும் வளம் பெறலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த சிக்கல்களும், தடங்கலும் நீங்கி லாபம் பெருகும். திருமணத்தடைகள் இருந்தாலும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் ஏற்படும். அந்தவகையில், அறிவு, விவேகம், பேச்சு திறன், வியாபாரம், லாபம் போன்றவற்றிற்கு காரணமாக புதன் கிரகம் விளங்குகிறது.
சிறப்புகள்:
எனவே, புதன்கிழமைகளில் தவறாமல் பூஜை செய்து வழிபட வேண்டும். ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு புதன்கிழமை வழிபாடு மிகவும் நல்ல பலனைத் தரும்.
அன்றைய நாளில் பூஜையறையிலுள்ள புதன் பகவானுடைய படத்தின் முன்பு தாமரை கோலம் போட்டு, கலச நீரில் மாவிலைகளை போட்டு வைக்க வேண்டும். பிறகு இந்த கலசத்தை புதன் பகவானாக பாவித்து, பச்சை துணியை அணிவித்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பச்சை காய்கறிகள், இனிப்பு பண்டங்களை நைவேத்தியமாக படைத்து, 2 அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, தூபம், கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.
விரதம்:
விரதம் மேற்கொள்வதாக இருந்தாலும் மேற்கொள்ளலாம்.. ஆனால், விரதம் மேற்கொள்பவர்கள், பச்சை நிற ஆடை அணிந்து நெய் தீபம் ஏற்றி, புதன் பகவானுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்து புதன் பகவானுக்கு காலை, மாலைகளில் பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். கோயிலுக்கு சென்று பச்சை வஸ்திரம் செலுத்தி, 5 விளக்கு ஏற்றி பூஜை செய்தும் வரலாம். புதன் அறிவாற்றலுக்கு அதிபதி என்பதால் இவரை விரதமிருந்து வழிபடும் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.
புதன்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று, பச்சை பயறு தானமாக தருவதால், ஜாதகத்தில் புதன் பகவானின் பலம் அதிகரிக்கும். பிராமணருக்கு பச்சை பயிறு தானம் செய்யுங்கள். நல்ல ஆரோக்கியத்திற்காக, புதன் கிழமையன்று திருநங்கைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். தானமாக வழங்கும் துணியின் நிறம் பச்சையாக இருக்க வேண்டும். இது தவிர, முளை கட்டிய பச்சை பயிறையும் தானம் செய்ய வேண்டும். ஆனால், ராகுகாலத்தில் தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பசும்புல்:
புதன் காலையில் பசுவுக்கு பசும்புல் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் புதன் தோஷத்தின் அசுப பலன்கள் விலகும். அதே நேரத்தில், மன நிம்மதியும் உற்சாகமும் கிடைக்கும். அதேபோல, பச்சை பயிறை ஊறவைத்து நெய் மற்றும் சர்க்கரை கலந்து காலை அல்லது மாலை பசுவிற்கு உணவாக தருவதால், வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
புதன்கிழமை மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம், செழிப்பு பெருகும்... புதன்கிழமை, விநாயகப்பெருமானுக்கும் ஏற்ற கிழமையாகும்.. எனவே, புதன்கிழமைகளில் விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications