Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிஷி பஞ்சமி.. பெண் சாபம் போக்கும் விரதம்.. சப்த ரிஷிகளை வணங்கினால் தோஷங்கள் நீங்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிஷி பஞ்சமி விரதத்தை யார் சரியாகக் கடைபிடித்து செய்கிறார்களோ அவனுடைய குடும்பத்துக்கு பெண்களினால் ஏற்பட்ட சாபம் விலகும்
விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வளர்பிறை பஞ்சமி திதியன்று சப்தரிஷிகளை பூஜித்து விரதம் அனுஷ்டிப்பதால் இந்த நாளுக்கு ரிஷி பஞ்சமி என்று பெயர். கணவன்-மனைவி இருவரும் தம்பதிகளாகவோ அல்லது பெண்கள் தனியாகவோ இந்த விரதம் அனுஷ்டிக்கலாம்.

பெண்கள் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழாமல் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் ஆதரவில்லாமல் வாழ்வது அல்லது மரணம் அடைவது, வீட்டிற்கு மருமகளாக வாழ வந்த பெண்ணை வாழ விடாமல் கொடுமைப்படுத்துவது, பிறந்த வீட்டிற்கு திருப்பி அனுப்புவது போன்றவை பெண் சாபம் ஏற்படுவதற்கு காரணங்களாக உள்ளன.

Rishi Panchami Viratham2023: Date, Puja Time, Rituals, Benefits of fasting

பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை அவமதிப்பது. அவள் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்துவது. பெண்களை ஏமாற்றுவது. பெண்களிடம் தவறான எண்ணத்தில் பழகுவது. கட்டிய மனைவிக்கு துரோகம் இழைப்பது. காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றுவது. பெண்களிடம் பணம் வாங்கி விட்டு ஏமாற்றுவது. மனம் வருந்தும் படியான கடுஞ்சொற்களை பேசி கண்ணீர் விட்டு அழ வைப்பது. உழைக்காமல் பெண்ணின் வருமானத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு உடல் வளர்ப்பதும் காரணங்களாக உள்ளன.

வான மண்டலத்தில் உள்ள சப்தரிஷிகளையும் வணங்கி பூஜை செய்யும் திருநாளே ரிஷிபஞ்சமி, முதலில் யமுனா பூஜையைச் செய்துவிட்டு, வயதான, மாதவிலக்கு நின்று ஏழு ஆண்டுகளான மாதர்கள் இந்த பூஜையைச் செய்வார்கள். விநாயக சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதி 'ரிஷி பஞ்சமி' என்றே போற்றப்படுகிறது. அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுகிறவர்கள் வாழ்வில் நலம் பல பெருகும் என்பது நம்பிக்கை. பெண் சாபத்தினால் ஏற்பட்ட தடைகள் விலகும் நன்மைகள் நடைபெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ஒரு முறை தருமர் கிருஷ்ணரிடம் சென்று 'எங்கள் குடும்பத்திற்கு பெண்களினால் ஏற்பட்டு உள்ள சாபம் விலக ஏதாவது பரிகாரம் கூற வேண்டும் எனக் கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர் கூறிய கதை இது. இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ளது விதர்பா எனும் இடம். அந்த இடத்தை ஸ்னேயஜித் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் இராஜ்ஜியத்தில் நல்ல நடத்தையும், நற்குணங்களும் கொண்டு நியாயம் மற்றும் உண்மையை கடை பிடித்த வண்ணம் சுமித்தரா என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி இருந்தாள். அவளும் கணவரைப் போன்றே அனைத்து நற்குணமும் கொண்டவள். மிகவும் ஆசாரபூர்வமான குடும்பம் அது. ஒரு முறை அவள் வீட்டு விலகாகிய நேரத்தில் வீட்டில் அவர்களை அறியாமலேயே தீட்டு பட்டு விட்டது. அது அவர்களுக்குத் தெரியாது.

அடுத்து சில தினங்களில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்து கணவன் நாயாகவும், மனைவி ஒரு மாடாகவும் பிறந்து அவர்களைப் போலவே வேறு ஜென்மம் எடுத்துப் பிறந்திருந்த அவர்களுடைய பிள்ளையின் வீட்டிலேயே வளர வேண்டியதாயிற்று. சுமித்தராவுக்கும் ஜெயஸ்ரீக்கும் தாம் யார் என்பதும் யார் வீட்டில் பிறந்து உள்ளோம் என்பதும் தெரியும். ஆனால் பிள்ளைக்கு அந்த மிருகங்கள் யார் என்பது தெரியாது. ஒரு நாள் சிரார்த தினம். அன்று அவர்கள் வீட்டில் சமைத்து வைத்திருந்த பாயசத்தை பாம்பு ஒன்று வந்து சாப்பிட முயன்றது. ஆனால் அது தனது வாயை வைக்க முடியாமல் சூடு தாக்கிவிட அதுவும் சூட்டினால் அதனுள் விஷத்தை உமிழ்ந்து விட்டுச் சென்றது. அதை தற்செயலாக நாயாகப் பிறந்து இருந்த ஜெயஸ்ரீ பார்த்து விட அந்த விஷம் கலந்த பாயசத்தை யாராவது உண்டு மடிந்து விடக் கூடாதே, அதனால் தன் மகனுக்கு சாபம் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கவலையில் அந்தப் பாயச பாத்திரத்தை தள்ளி அதை கீழே கொட்டி விட அதை கவனித்து விட்ட சமையல்காரப் பெண்மணி அதை முதுகெலும்பே முறியும் அளவுக்கு அடித்துத் துரத்தினாள். அதற்கு பதிலாக வேறு பாயசம் செய்து வைத்தாள்.

அடிப்பட்ட நாயும் வலி தாங்காமல் அழுது கொண்டே மாடாக இருந்த கணவனிடம் தன் நிலையை எடுத்துக் கூறி அழ அவளை மாடு உருவில் இருந்த கணவன் தேற்றினான். அனைத்து சாஸ்திரமும் நன்கு படித்திருந்த அந்த அந்தணணின் மகன் அந்த விலங்குகள் பேசியதைக் கேட்டார். அவருக்கு விலங்குகள் பாஷையும் புரியும். ஆஹா......தவறு நடந்து விட்டதே, பூர்வ ஜென்மத்தில் நம் தாய் தந்தையாக இருந்தவர்கள் அல்லவா மாடாகவும் நாயாகவும் தற்போது பிறந்து நம்முடன் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டான்.

எந்த தந்தையின் மரணத்திற்கு இன்று திவசம் செய்கிறோமோ அவர் மனதை அல்லவா வருத்தப்பட வைத்து விட்டோம் என எண்ணிக் கலங்கி அந்த இரு விலங்குகளையும் உள்ளே அழைத்து வந்து நன்கு குளிப்பாட்டி அவற்றை வணங்கியப் பின் அவற்றையும் அழைத்துக் கொண்டு ஒரு முனிவரிடம் சென்று அதற்கு பரிகாரம் கேட்டான்.

அவரும் ரிஷி பஞ்சமி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறி அதை செய்தால் அவனுடைய பெற்றோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் எனவும் கூற அவனும் அதை செய்து தன் பெற்றோர்களுக்கு மோட்சத்தை அடைய வழி செய்தார். இந்தக் கதையை தருமரிடம் கூறிய கிருஷ்ணர் ரிஷி பஞ்சமி விரதத்தை யார் சரியாகக் கடைபிடித்தச் செய்கிறானோ அவனுடைய குடும்பத்துக்கு பெண்களினால் ஏற்பட்ட சாபம் விலகும் என்று கூறி அவருக்கு ஒரு வழி காட்டினார்.

பூர்வ ஜென்ம பாபங்களை விலக்கிக் கொள்ள விதர்பாவை ஆண்டு வந்த சிதாஷ்வ எனும் மன்னன் பிரும்மாவிடம் ஒரு விரதத்தை தமக்கு அருளுமாறு வேண்டிக் கொண்டபோது அவர் இந்தக் கதையை கூறியதாகவும் இன்னொரு செய்தி உள்ளது. ஆனாலும் இந்த விரதமே பூர்வ ஜென்ம பாபங்களை நீக்குகிறது.

ரிஷி பஞ்சமி தினம் இந்த ஆண்டு நாளை கடைபிடிக்கப்படுகிறது. அருகில் உள்ள நதி, குளம் கிணறு ஆறுகளுக்கு சென்று நாயுருவி குச்சியைக் கொண்டு பல் துலக்கி, நெல்லிப்பொடியை தேய்த்துக் கொண்டு குளிக்க வேண்டும். பிறகு வீட்டில் முறையாக கலசங்களில் கஷ்யபர், அத்ரி, பரத்வாஜர், விசுவாமித்ரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகிய 7 மகரிஷிகளுடன் அருந்ததியையும் சேர்த்து ஆவாகனம் செய்து பூஜை செய்ய வேண்டும். பிறகு 7 பேரை 7 மகரிஷிகளாக பாவித்து சப்தரிஷிகளுக்கு நிவேதனம் செய்ததை அவர்களுக்கு தானமாகத் தர வேண்டும். அன்று இரவு ரிஷிகளின் சரித்திரத்தை சிரவணம் செய்து, மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

ரிஷி பஞ்சமி பற்றி மற்றொரு புராண கதை உள்ளது. ஒரு சமயம் தேவேந்திரன் தனது குருவுக்கு துரோகம் செய்ததால், தன் பதவி, ராஜ்ஜியம், செல்வம் போன்றவற்றை இழந்து தாமரைத் தண்டுக்குள் வசிக்கக்கூடிய சாபத்தை பெற்றான். இதையடுத்து அவன், விஷ்ணுவை துதித்து 'என் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அதற்கு விஷ்ணு, 'உன் சாபத்தை யாராவது ஏற்றுக் கொண்டால், உனக்கு தோஷம் நீங்கி பழையபடி ராஜ்ஜியமும், செல்வமும் கிடைக்கும்' என்றார். இதையடுத்து இந்திரன், தன்னுடைய சாபத்தை ஏற்றுக்கொள்ளும்படி பலரிடம் கேட்டான். அவனது சாபத்தை ஏற்க, மரம், நிலம், தண்ணீர், பெண் ஆகிய நான்கு பேர் முன்வந்தனர். இதன் காரணமாக இந்திரனின் சாபம் நீங்கியது. அவன் மீண்டும் தன் ராஜ்ஜியமான இந்திரலோகத்தை அடைந்து, செல்வ வளத்துடன் வாழத் தொடங்கினான்.

தன்னுடைய சாபம் நீங்க காரணமாக இருந்த மரம், நிலம், தண்ணீர், பெண் நால்வருக்கும் வரம் அளித்தான். அதன்படி மரத்தை வெட்டினாலும் மீண்டும், மீண்டும் துளிர்க்கும் சக்தி பெற்றது. நிலம் வறண்டு போனாலும், மறுபடியும் தண்ணீர் பட்டதும் பசுமையாக மாறிவிடும் தன்மை பெற்றது. தண்ணீருக்கு எல்லாவித பொருட்களின் அசுத்தங்களையும் நீக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது. பெண்ணுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்பட்டு, அதன் மூலம் அவளது தோஷங்கள் அனைத்தும் நீங்கி எப்போதும் புனிதமாக விளங்க ஆரம்பித்தாள். பெண்கள் மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாத செயல்களை செய்வதால் ஏற்படும் தோஷத்தை நீக்க 'ரிஷி பஞ்சமி' விரதம் கைகொடுக்கிறது.

ரிஷி பஞ்சமி நாள் அன்று, கவுதமர் - அவரது மனைவி அகல்யா, பாரத்வாஜர் - அவரது மனைவி சுசீலா, விசுவாமித்திரர் - அவரது மனைவி குமதவதி, காஷ்யபர் - அவரது மனைவி அதிதி, ஜமாத்கனி - அவரது மனைவி ரேணுகா, வசிஷ்டர் - அவரது மனைவி அருந்ததி, அத்ரி - அவரது மனைவி அனுசுயா ஆகிய சப்த ரிஷிகளையும், அவர்களின் பத்தினிகளையும் பூஜிப்பதன் மூலம், பெண்களின் சாபமும், அவர்களின் தோஷமும் விலகும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+