சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை.. எங்கும் ஒலித்த சரண கோஷம்.. 3 நாட்களுக்கு நடை அடைப்பு
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்பனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர். இன்று இரவுடன் கோவில் நடை அடைக்கப்படுவதால் 41 நாட்கள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளித்த ஐயப்பனுக்கு 3 நாட்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது.
ஐயப்பன் கோவில்: சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் நவம்பர் 17ம் தேதி தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது.

ஐயப்பன் தரிசனம்: தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பக்தர்கள் வந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு தரிசனத்திற்காக அணிவிக்கப்பட்டனர். ஐயப்பன் திருமேனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனர். கடந்த வாரம் கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது.
தங்க அங்கி: திருப்பதி மாடல் வரிசை அமல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் நெரிசலில் சிக்கினர். எந்த வித வசதியும் செய்து தரப்படவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெற உள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். 420 சவரன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.
ஊர்வலம்: இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கடந்த 23ம் தேதி காலை ஊர்வலமாக சபரிமலை நோக்கி புறப்பட்டது. ஓமல்லூர், ரான்னி, பெருநாடு வழியாக நேற்று மதியம் இந்த ஊர்வலம் பம்பையை அடைந்தது. பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த தங்க அங்கி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சன்னிதானத்திற்கு புறப்பட்டது.
மண்டல பூஜை: நேற்று மாலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தங்க அங்கி அணிந்து தீப ஒளியும் ஜொலிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இன்று மதியம் 11.30 மணியில் இருந்து ஒரு மணிக்குள் ஐயப்பனுக்கு மண்டல பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புஷ்ப அபிஷேகம் நடைபெற்றது. இன்று இரவு அத்தாழ பூஜை நடைபெற்ற பின்னர் கோயில் நடை அடைக்கப்படும்.
மகர ஜோதி: மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். டிசம்பர் 31 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். மகர நட்சத்திரம் வானில் தோன்ற ஜோதி வடிவத்தில் ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். ஐயப்பனை ஜோதி வடிவத்தில் தரிசனம் செய்யவும் மகர விளக்கு பூஜையில் பங்கேற்கவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
70 ஆயிரம் பக்தர்கள்: மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தினசரியும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் சபரிமலையை நோக்கி படையெடுக்கின்றனர். 70 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இன்று அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை பேர் தரிசனம்: சன்னிதானத்தில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஐயப்பனை தரிசனம் செய்யவும், பக்தர்களுக்கு வழிபாடுகள் செய்யவும் கடும் சிரமம் ஏற்பட்டது. உணவும், குடிநீரும் கூட கிடைக்காமல் சில நாட்களில் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 நாட்களில் 31,43,163 பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். ரூ.204 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுநாள் வரை லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளித்த ஐயப்பனுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications